நோன்பு! நோன்பு!

பை மேலும் பெரிய நோன்பை நோக்கிச் செல்கிறது. இறை வேண்டுதலும், தானதர்மங் களும், பரிகாரச்செயல்களும், கூடு தல் பேரார்வத்துடன் நிறைவு பெ றச் செய்து நோன்புகாலம் மிகவும் இறையருள் பெறும் பண்பாடையர் களே நாம். நூற்றாண்டுகளாக நாம் பாதுகாத்துச் செல்கின்ற இந்த விசு வாச மரபு மிகவும் நம்பிக்கையு டன் பாதுகாக்க அனைவருக்கும் இயலுமாறு மன்றாடுகிறேன். இயேசு உலகறிய வாழ்ந்த காலத்
6
தில், ஒருநாள் யோவானின் சீடர்கள், நோன்பினைக் குறித்துள்ள ஒரு கேள்வியுமாக இயேசுவிடம் சென்றதாகப் புனித மத்தேயு குறித்துள்ளார் (9:14-17) “நாங்களும், பரிசேயரும் அதிகமாக நோன்பிருக்க உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை? என்றனர். அதற்கு இயேசு அவர் களை நோக்கி மணமகன் தங்களோடு இருக்கும் வரை மணவிருந்தி னர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? “மணமகன் அவர்களை விட்டு பிரிய வேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும் நோன்பிருப் பார்கள்”
இயேசுவின் சீடர்களுக்கு நோன்பு ஒரு ஆசாரம் அன்று. அது ஒரு தாகத்தின் அடையாளம். மணமகன் தன்னிடம் இருந்து அகற்றுப் பட்டிருக்கிறார் என்ற பகுத்தறிவில் இருந்து ஏற்படுகின்ற அவனுடன் இருக்க வேண்டும் என்ற தாகத்தின் அடையாளம். இயேசு கூறியவாறு படகில் கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டச் சீடர்களின் அனுபவம் புனித (யோவான் 6:16-21) விளக்குகிறார். இயேசு அவர்களுடன் இருக்கவில் லை. கடலில் பெருங்காற்று வீசியது. சீடர்கள் தண்டு வலித்து சோர்ந்த னர். இயேசு கடல் மீது நடந்து அவர்களின் அருகில் வந்தார்.”அவர் கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் சென்று சேர்ந்து விட்டது” (யோவ 6:21) இயேசு நம்முடன் இருக்க வேண்டும் என்று விரும்ப கிறவர்களுக்கு ஏற்படும் நன்மை யக்குறித்தே இறைவசனம் நமக் குக் கற்பிக்குகிறது. உலக வாழ்க் கையில் இயேசுவின் கட்டளைப் படி வாழ்பவர்களுக்கும் அவரு மாக உள்ள அருகிருப்பு இழக்க நேருகிறது. இந்த உண்மை அறிந் ததனால் சபை நோன்பு அனுச ரிக்க அழைக்கிறது. அழைக்கப் பட்ட அனைவரும். சபையிந் அழைப்பின்படி நோன்பு அனுச ரிக்கவும். அதனால் கிடைக்க இருக்கும் கொடைகளைப் பெறு வதற்கான நற்செயல்கள் செய்ய வும் ஆயத்தமாவோம்.
நமது பேரார்வத்திற்கு ஏற் றவாறே இறையருளைப் பெற இய லும். இறையருள் நிறையை இறை முன்னில் இரக்கம் பெறவேண்டும்.மணவாளனின் அருகிருப்பு அனுப வமாக்க உலகத்தின் எந்த முடிச்சுகளை நாம் உடைக்க வேண்டும் என்று புரிந்து கொண்டாக வேண்டும். எனக்கு அறிமுகமான ஒரு இளைஞன் இருந்தான். அவன் தனது பணியில் உயர்வில்லாதவன் ஆனால் மொபையிலிலுள்ள அடிக்ஷன் மூலம் அவனுக்கு தனது பணிகளில் கவனிக்க இயல்வதில்லை. அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் மொபை லில் விளையாடத் தொடங்குவான். இரவு தூங்காமலும். விளையாடு வான். பகலில் அலுவலகத்திற்கு செல்லும் போது மிகுந்த சோர்வு, உயி ரற்றத் கண்ணுகளும், செழுமை இழந்த முகவும். இது இன்று நமது நாட் டில் இளைஞர்களில் எல்லாம் படர்ந்துள்ளது. அநேகர் மருத்துவம் தேடும் நிலையில் உள்ளனர். இந்த தீய பயன்பாட்டிற்கு எதிராக நாம் ஒரு மொபைல் நோன்பு எடுக்கக்கூடாதா? அடிமைப்பட்டிருப்பவர்கள் மட் டுமின்றி ஏனையோரும் மொபைல் பயன்பாடு மிகவும் குறைப்பது எவ் வாறு என்று தீர்மானிப்போம். ஆனால் தியாகம் வேண்டும். வருகின்ற அழைப்புகளை மட்டும் எடுப்போம் என்றோ ஒரு நாள் இத்தனை அழைப்புகளுக்கு மேல் அழைப்பதில்லை என்றோ தீர்மானிக்க வேண் டும். தொலைக்காட்சி அடிமைத்தனமும் நோன்பில் உட்படுத்த வேண் டும். இறைச் செய்திகள் அளிக்கும் சானலுகளுக்குகாக கூடுதல் நேரம் ஒதுக்கி வைக்க வேண்டும். வாழ்க்கையில் நம்மை அடிமையாக்கி இருக் கின்ற வீண் ஆசைகளிலிருந்து மீட்படைய இம்முறை நமது நோன் பைப் பயன்படுத்துவோம். அனைவருக்கும் மிக நல்ல நோன்பு கால வாழ்த்துக்கள்.