

தகுதியுடையவர்க ளுக்கு தகுதிக்கு ஏற்றவாறு இழப்பு நேராமல் கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டும் என்பதே உலகு நீதி நன்மைச் செய்பவர்க ளுக்குக் கைமாறாக நன்மை கிடைக்க வேண்டும் என்பதும், தீமை செய்பவர்களுக்கு கைமாறா கத் தீமையே கிடைக்க வேண்டும் என்பதும் உலகு நீதியாகும். வேலைக்கேற்ற கூலியும் கூலிக் கேற்ற வேலையும் பொது விதியா கும். வறியவர்களுக்கு பணம் படைத்தவர்கள் உதவ வேண்டும் என்பதும் பொது நீதியாகும். ஏழை எளியவர்களுக்கு அடிப்படை வசதி கள் செய்து கொடுக்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும். உன்னி டம் உள்ளது உனது ஆற்றலால் கிடைத்தவை மட்டுமன்று. நல்ல சூழ்நி லையும் வாய்ப்பும் கிடைத்தமையாலும் ஆகும். இறைவன் நம் அயலா னுக்குரியவற்றையும் நம்மிடம் சேமித்துள்ளார் என்று நாம் உணர வேண் டும். ஒருமுறை ஒருவர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட் டிருந்த பேருந்தில் ஏறி இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களிடம் ஒரு சிற்றுரை ஆற்றினார். நான் ஒரு பிச்சை எடுப்பவனுக்குப் பிறந்த பார் வையற்ற மாற்றுத் திறனாளியாவேன். எனக்கு கண்ணில்லாதது என் தவறு அன்று. உங்களுக்கு கண் கிடைத்தது. உங்களது தகுதியும் அன்று. ஆகையால் கண்ணில்லாத எனக்குக் கண்ணுள்ள நீங்கள் உதவி புரிய வேண்டும். ஐம்பது காசில் குறைவாகவும். ஐம்பது ரூபாயில் கூடுதலாக வும் பெற்றுக் கொள்ளமாட்டாது. இந்த சமூகத்தில் கண்ணுள்ள நீங்கள் உங்கள் கண்களால் எனக்கு வாழ்வளிப்பீர். அவருக்கு ஏராளம் பேர் உதவினர். இறை நீதி இதற்கு மேலானதாகும். மனிதனை இறைவன் படைத்தது ஏதேன் தோட்டத்தில் வாழ் வதற்காகும். இறைவனுடன் சேர்ந்து வாழ்வதற்கே, விண்ணரசு அல்லது ஏதேன் எனக் கூறப்படுகிறது. ஆன்மாவாகிய இறைவனுடன் ஆன்மா உள்ள மனிதன் ஆன்மாவுடன் வாழும் போதே பேரானந்தம் அனுபவப்படுகிறது. இந்தப் பேரா னந்தம் பெறவே இறைவன் மனி தனைப் படைத்துள்ளார். ஆனால் இந்த உண்மையை அறியாமல் மனிதன் இறை வனை விட்டகன்று. அழிந்து போகும் மகிழ்ச்சியைத் தேடி ஆன்ம மகிழ்ச்சியாகிய பேரா னந்ததத்தை இழந்தது நீதியற்ற செயலாகும். இந்த நீதியற்ற செய லுக்கு முற்றுப்பள்ளி வைத்து, இறைவனோடு இணைந்து ஆன்ம நலன் பெற வேண்டும் என்பதே இறை நீதி. “நற்செய்தியை அறி விக்காவிடில் ஐயோ எனக்கு கேடு” (1கொரி 8:10) நமது வாழ்க் கையில் ஏற்படுகின்ற துன்ப துய ரங்களுக்கு காரணம் நாம் நம் கடமைகளை விட்டு ஒதுங்கி விடுவதாகும். நற்செய்தி நவில் வது நாம் ஒவ்வொருவரின் கட மையாகும். இதில் நம்மில் ஆண வம் கூடாது. இவ்வாறு குடும்பத் தில் குடும்பத் தலைவன், குடும் பத் தலைவி பங்கில் பங்குத் தந்தை, சபையில் திருத்தந்தை. ஆயர் என நாம் ஒவ்வொருவ ரும் நமது கடமைகள் செய் கிறோம். ஆனால் இதில் மிக முக்கியமானது நாம் இறையர சைக் குறித்து அறிவிப்பதாகும். அதாவது சபையிடம் உள்ள நமது கடமை. அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுவதே. அப்பொழுது இவை யனைத்தும் உங்களுக்குச் சேர்த்து கொடுக்கப்படும்” (மத் 6:33) இங்கே சேர்த்துக் கொடுக்க வேண்டியவற்றிற்கே நாம் அதிகம் சிறப்பளிக்கிறோம். நற்செய்தி நவிலும் பொறுப்பு திருத்தந்தைக்கும் ஆயர்களுக்கும் குருக்களுக்கும் மட்டுமே என்ற தவறானக் கொள்கை பலருக்கு உள்ளது. ஆனால் சபையில் நற் செய்தி விளம்ப அனை வரும் அழைக் கப்பட்டு ள்ளோம். சபை என்பது இறைமக்களே (திருச்சபை32) சபை உறுப்பி னர்கள் அனைவருக்கும் ஒரேவித உரிமைகளும் பொறுப்புகளும் உள் ளன. சபைத் தலைமையுடன் பொதுநிலையினரும் இணைந்து செயல் படும்போதே முழுமையடைகிறது. பொதுநிலையினர் இல்லாமல் சபை முழுமையடையாது. சபைத் தலைவர்களும் பொது நிலையினும் செயல் பட்டால் உலகத்தின் எல்லைவரை நற்செய்தி மிக விரைவில் சென்ற டையும் (மாற் 16:15) சபையிலிருந்து வேறுபட்டு நிற்கும் ஒரு சிலர் மேலும் சந்தேகக் கண்களுடன் நோக்கும் போது நற்செய்தி தன் முழுமையை அடைய தடை நிற்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமையே இதன் முதற்காரணம். சபைத் தலைமையிலிருந்து ஏற்படும் ஊக்கமளிக்காமையே நற் செய்தி அளிக்க தடையாகிறது என்று கூறி சபையை விட்டகன்றுள்ள நற்செய்தி விளம்பலை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. இங்கே சபையைப் பின்பற்றுவதே இறைவிருப்பம். காரணம் இரண்டாம் கிறிஸ்து ஏற்றுக் கூறப்படும் புனித பிரான்சிஸ் அசிசி உரோமையில் சென்று நற்செய்தி விளம்ப அனுமதி கேட்கிறார். உடன்பாடற்ற பதிலே அவருக்குக் கிடைத்துள்ளது. அதும் திருத்தந்தையிலிருந்து அவர் இதை இறைவிருப்பமாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டமையால் பிற் காலத்தில் மிகவிரைவில் அவர் மேன்மையடைந்துள்ளார். என்பது நாம றிந்ததே. இங்கே இறைவனின் நேரத்திற்கு விட்டுக்கொடுப்பதே முக்கி யம். “ஆகையால் கடவுளுடைய வல்லமை மிக்க கரத்தின்கீழ் உங்க ளைத் தாழ்த்துங்கள். அப்பொழுது அவர் ஏற்றகாலத்தில் உங்களை உயர்த்துவார்”(1பேதுரு 5:6) நமது நேரத்திலே அனைத்தும் செய்ய வேண் டும் என்று எண்ணக்கூடாது. புனித பாத்திரோ பியாவை திருப்பலியும் அர்ப்பிக்க கூடாது என்று சபை விலக்கியது. இவர் சபை கட்டளையை ஏற்றுக்கொண் டார், புனித அந்தோனியாரைப் புதுமைச் செயல்களிலிருந்து விலக்கி யது. ஆனால் சபையின் கட்டளைக்கு தலை குனிந்தார். இவர்களெல் லாம் இன்று நாம் அறியும் புனிதர்களே. நமது நற்செய்தி செயல்களுக்கு சபைத் தலைமை தடைநின்றால் நமது தூய்மைக்காக இறைவன் அனு மதிப்பது யாது என்று ஆராய்வதில் தவறொன்றுமில்லை. இங்கே தாவீது சிமயிடம் கூறுவது போன்று இறைவன் கட்டளையின்படியே இது நிகழ்ந் தால், இதைத் தடை செய்ய நமக்கு என்ன உரிமை உள்ளது(2சாமு 16:10) நற்செய்தி கூட்டமைப்பின் முன்னேற்றத்திற்கு பங்குத்தந்தைத் தடை நிற்பதாகக் கூறுபவர்களும் உள்ளனர். அது உண்மையாக இருக் கலாம். அதை இறைவிருப்பமாக காண்பதே பொருத்தம். அது நமது முன்னேற்றத்திற்கும் தூய்மைக்கும் உரிய காலமாயிருக்கலாம். இந்த கால கட்டத்திலுள்ள மன்றாட்டு, நமது மனநிலை, இவற்றின் அடிப்படையிலே நமது வெற்றியும், முன்னேற்றமும் அமையும். பல குருக்களும் தடை விதிப்பதற்கான காரணம், நமது இறைமன்றாட்டிலும், அன்பிலும், குறை ஏற்பட்டுள்ளமையே ஆகும்.
