

இயேசுவில் அன்பானவர்களே, விவிலியத்திலும், நடைமுறையி லும் ஆண்டவரை நோக்கி துதித் தவர்கள், ஜெபித்தவர்கள் வெட் கப்பட்டு போனதில்லை. நாம் எல் லோரும் காலையிலும் மாலையி லும் ஜெபிக்கின்றவர்கள்தான் ச.ஞ 16:28-ல் வாசிக்கிறோம் “கதிரவன் எழுமுன்னே மக்கள் எழுந்து ஆண்டவருக்கு நன்றிக் கூறி ஜெபிக்கவேண்டும் என்று நாமும் காலையில் எழுந்து நன்றி சொல்லி ஜெபிப்பவர்கள்தாம். ஆனால் தி.பணி 16:25-லிருந்து வேறு ஒரு கால சூழலில் பவுலும் சீலாவும் ஜெபித்து துதிப்பதைப் பார்க்கிறோம். பவுலையும் சீலா வையும் ஒரு பெண்ணிடமிருந்து குறிசொல்லும் ஆவியை விரட்டி னதால், அவளை வைத்து பணம் சம்பாதித்து கொண்டிருந்தவர்க ளின் எரிச்சல், கோபம் அவர்களை சிறையில் அடைக்க வைத்தது.
ஒரு நன்மை செய்தோம் அதற்குரிய பரிசா இது சலித்துக் கொள்ளாமல், முணுமுனுக்காமல் நள்ளிரவில் புகழ்ப்பா பாடி இறை வனிடம் வேண்டினார்கள். நம்மு டைய வாழ்க்கைக்கும் இது ஒரு பாடம் நாம் நன்மை செய்து அதற்க்கு நன்மை கிடைப்பதற்க்கு
பதில் தண்டனை கிடைக்கலாம். அப்படி ஒரு சூழல் வந்தாலும் நாம் ஆண்டவரிடம் முணுமுணுக்கவோ, சலிக்கவோ, ஒருபோதும் கூடாது. மாறாக ஆண்டவருக்கு நன்றி சொல்லி ஜெபிக்கவேண்டும் அப்படி செய்யும்போது ஏற்படும் காரியங்களை பார்ப்போம்.
தி.பணி 16:25-லிருந்து நாம் வாசிக்கும்போது நள்ளிரவில் அவர் கள் புகழ்ப்பா பாடி ஜெபித்தபோது நான்கு காரியங்கள் அங்கு நடந்தது. ஒன்று பெரிய நில நடுக்கம் ஏற்ப்பட்டது. இரண்டு அடித்தளம் அதிர்ந்து. மூன்று கதவுகள் அனைத்தும் திறந்தன. நான்கு விலங்குகளும் கழன்று விழுந்தன.
கிறிஸ்துவில் அன்பானவர்களே. வாழ்க்கையில் நீங்கள் சிங்கப் படும்போது. அவமானப்படுத்தப்படும்போது இகழப்படும் போது, ஆண்ட வருக்கு நன்றி சொல்லி ஜெபிக்ககற்றுக் கொள்ளுங்கள். அப்படி நாம் செய்யும்போது நம்முடைய சிறைகளெல்லாம் தகர்க்கப்படும். அடைத்து வைத்திருக்கின்ற வாசல்கள் திளக்கப்படும். விலங்குகளும் அவிழ்க்கப்ப டும். அதுமட்டுமா இல்லை அன்பானவர்களே,யார் உங்களை சிறை வைத்தார்களோ, அவர்கள் உங்கள் காலில் விழும்படியாக செய்வார். அவர்களே உங்களுக்கு விருந்து பரிமாறும்படி ஆண்டவர் செய்வார்.
தி.பணி 16:35-ல் வாசிக்கிறோம் காயப்படுத்தினவர்களே காயங் களை கழுவினார்கள் அதேபோல் யார் உங்களை காயப்படுத்தினா லும் காயப்படுத்தினவர்களை வைத்து ஆண்டவர் உங்கள் காயங்களை கழுவும்படி செய்வார்
இதெல்லாம் எப்பொழுது நடக்கும் நாம் எந்த சூழ்நிலையிலும்1 தெச 5:17,18-ல் கூறுவதைபோல் நன்றிகூறி ஜெபிக்கபழகும்போது நடக் கும் எப்பொழுதும் ஆண்டவரை துதிப்போம். ஜெபிப்போம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
