கோபம்! பாவமா?

நாம் கோபப்படுவதி னால் அனேக ஆசீர்வாதங்களை இழந்துவிடுகிறோம்.
விவிலியத்தில் அதை பற்றி நாம் காணும்போது யாக் கோபு 1:19.20-ல் கேட்பதில் வேக மாகவும், பேசுவதிலும், சினம் கொள்வதிலும் தாமதம் காட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டி ருக்கிறது. 1:20-ல் பார்த்தோமா னால் ஆசீர்வாதங்கள் நிறைவேற தடையாக சினம் இருப்பதாக இருக்கின்றது.
இன்று நம்முடைய குடும் பங்களில் கணவன், மனைவி, பெற் றோர், பிள்ளைகள் என்று பார்த் தால் கோபத்தால் பிரிவுகளும், பிரச்சனைகளுமாகத்தான் இருக் கின்றது.
கோபத்தின் காரணம் 1.

பெறுமை 2, பொறாமை 3, மன்னிக்க முடியாமை.

  1. பொறாமை
    தொ.நூ 4:4,5 காயின், ஆபேல் மீது பொறாமை கொண்டான். அது கொலை செய்யும் அளவுக்கு சென்றது. 1சாமு 18:6,7. தாவீது போர் முனை சென்று வந்தபோது பெண்கள் ஆரவாரத்துடன் சவுல் கொன் றதோ ஆயிரம் தாவீது கொன்றதோ பதினாயிரம் என்று பாடினர், அதை கேட்ட சவுல் பொறாமை கொண்டு தாவீது மீது ஈட்டு எறிந்து அவனை கொலை செய்ய வகை தேடியதாக பார்க்கிறோம்.
    கோபத்தினால் வரும் விளைவுகள் யாத் 32:15. கடவுளின் கரத் தால் எழுதிய பலகையை (கற்களை) கோபத்தினால் எறிந்து உடைத் தால் எண் 20:4.6 இஸ்ரயேல் மக்களை 40 ஆண்டு காலம் வழிநடத் திய மோசே கடவுள் சொன்ன வார்த்தையை மறந்து பாறையிடம் பேசு வதற்கு பதிலாக கோபத்தால் கோலால் 2 முறை பாறையை அடித் தளம். எனவே கானான் என்கின்ற பாலும், தேனழும் ஓடும் தேசத்திற் குள் செல்ல முடியாமல் போனது. எத்தனை ஆவல் மோசேக்கு இருந் திருக்கும். எல்லாம் கோபம் ஒரு நொடியில் நொறுக்கிவிட்டது. தம்மு டைய வாழ்விலும் கோபத்தினால் ஆண்டவர் தரும் எத்தனை ஆசீர் வாதங்களை இழந்திருப்போம் என்று எண்ணி பார்ப்போம். யாக் 1:20 தேவ சித்தம் நிறைவேறாது

தாவீதின் பொறுமை: ஒரு நாள் தாவீது தனது படைபலத்துடன் சென்று கொண்டிருக்கும்போது சவுலின் சந்ததியில் உள்ள சிமயி என்கி றவன் தாவீது அரசர் மீது கற்க ளையும், புழுதியையும் எடுத்து வீசி கேவலமாக அரசனைவே சியின் மகனே, இரத்த வெளி யனே என்று பேசுகிறான். தாவீது அரசருடன் வந்த அவ ரது மெய்க்காப்பாளன் அபிசாய் அரசரிடம் வந்து, “இந்த செத்த நாய் என் தலைவராம் (2 சாமு 16:9-10) அரசரை பழிப்பதா இதோ நான் சென்று ஆவனது தலையை கொய்து எளிய அனுமதி தாரும் என்றான். அதற்கு தாவீது செரூயாவின் மக்களே இதை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவன் பழிக்கப்பட்டும் ஒரு வேளை தாவீதை பழி’ என்று ஆண்டவரே அவனுக்கு சொல்லியிருந்தால் நாம் என்ன செய்ய முடியும். அவனைவிட்டு விடு என்றார். இந்த மன்னிக்கும் மனநிலை நமக்கு உண் டானால் நாமும் தாவீதை போல ஆண்டவருக்கு ஏற்ற மகனாக, மகளாக மாற முடியும். எனவே கோபப்பட்டாலும் பாவம் செய்யாதீர்கள். எபேசியர் 4:26 சொல்லப்பட்டபடி வாழ்ந்து ஆண்டவரின் ஆசியை பெற்றிடுவோம். ஆமென்