என்னையே நான் தீயிலிட்டேன்

இனி வாழ்பவன் நான் அல்ல,கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலாத்2:20)
ஆவியான தெய்வத்தை தொடஅவரோடு இணைந்து இருக்க என்ன வழி? என்ன செய்ய வேண்டும்? பதில் மிக சுலபம்தான்.என் தாயின் கருவில் உருவான நாள் முதல் இன்று நான் இருக்கும் நாள்வரை எனக்கு கிடைத்த எல்லா நன்மை களுக்கும் ஆசீருக்கும் மிகுந்த நன்றி என் தெய்வமே என்னிடம் இருப்பதெல்லாம் என் கடவுளின் கொடையே, அப்படி நன்றி சொல்லி நன்றிசொல்லி கடவுளை மகி மைபடுத்துவதுதான் நான் கடவுளை தொடுவதற்க்கும், இணைந்து வாழ்வதற்க் கான வழி இப்பூவுலகில் எதுவும் நான் உழைத்து பெற்றுக்கொண்டது அல்ல, எல் லாமே கடவுளின் ஈவுதானே?
நான் என்ற அகந்தை, எனக்கு எல்லா தெரியும் என்ற மமதை, செறுக்கு உடல் பலம் பணபலம், அதிகார பலம் என்று செறுக்குகொள்வோர் ஏராளம். தன்னை தாழ்த்திகொள்ளும் போதுதான் ஆண்டவர் ஒருவரை உயர்த்துகிறார். தொடக்க நூலி லிருந்து இறுதிவரை தன்னை தாழ்த்திகொள்கின்றார்களோ அபர்களை கடவுள் உயர்த்துகிறார் நான் என்ற அத்தனையை சுட்டெரிக்க வேண்டும் ஆண்டவரே நான் வெறும் களிமண் உம் விருப்பம்போல் என்னை பயன்படுத்தும் என்று கூற வேண்டும் அப்போதுதான் நாம் புதிய படைப்பாக மாற முடியும். ஆண்டவர் இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக
ஆமென்