வேறு வழியில்….

இயேசு கிறிஸ்துவில் அன்பான வர்களே. இதோ மீண்டும் ஒரு கிறிஸ்துமஸ் வருகிறது. மகிழ்ச்சி யான நாட்கள் முன்னதாகவே உங் களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுகிறேன்.
மத் நற்செய்தி 1. 2 அதிகாரங் களில் இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளை வாசிக்கிறோம். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னி மரியாள் யோசேப்போடு மன ஒப்பந்தமானவர், ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப்பட்டு இம்மானுவேல் பெற்றெடுக்க சம்மதிக்கிறார். ஏரோது அர சன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப் போது ஞானிகள் கிழக்கிலிருந்து எருசலேமுக்கு வந்து யூதர்களின் அரசரை வணங்க வருகின்றார்கள்.
இதை கேட்டவுடன் ஏரோது அரசன் கலங்கினான் இன்றும் கிறிஸ்து மஸ் என்றாலே அல்லது இயேசுவின் பெயரை கேட்டாலே அனேகஅரசர்களுக்கு கலக்கம்தான் அனேகருக்கு கோபம், வெறுப்பு, பகை கலக்கம் எங்கு போய் முடி யும்? தீமையில்தானே? ஏரோது அரசன் யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்து இயேசு வின் பிறப்பை பற்றி கூறி அவரை நாள் ஆராதிக்க வேண்டும்,குழந் தையை பற்றி தெளிவாக கூறுங் கள் என்கிறான் அவர்கள் ஞானி கள்தான் ஆனால் அரசனின் கசப்பு. மனதில் இருக்கும் தீமையை அறிய முடியவில்லை நீங்கள்ஞானிகளாக இருந்தாலும் உங்களோடு உறவாடும் உங்களு டைய அன்பு தோழர்களின் எண் ணங்கள், தீமைகள் உங்களுக்கு அறிய வேண்டும் என்பதில்லை அதற்க்கு கடவுளின் அருளும், க டவுளின் ஆசியும் கடவுளின் தயையும் வேண்டும்.
ஏரோது மன்னனுடைய உள்எத்தை அறியாத ஞானிகள் குழந்தை யேசுவை காண சென்றார்கள் லூக்கா 2:11-ல் வாசிக்கிறோம். குழந்தையை அதன் தாய் வைத்திருப் பதை கண்டு நெடுஞ்சான் சிடையைய் விழுந்து வணங்கினார்கள் அனேக கத்தோலிக்க மக்கள் கூட இயேசுவை ஏற்றுக் கொள்வார்கள் தாய்மரியாவை ஏற்றுக்கொள்வதில்லை அனேகர் மறைவாக விலக்கி வைத்திருக்கிறார்கள் அன்றும் யோசேப்பு மரியாவை மறைவாக விலக்கி வைக்க தீர்மானித்தபோல ஆண்டவர் வானதூதர் வழியாக மத் 119.20.கூ றுகிறார். மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டும் இது நமக்கும் பொருத்தும்.
ஞானிகள் குழந்தை இயேசுவை வணங்கி திரும்பும் போது லூக் 2:12 -ல் ஆண்டவரின் எச்சரிக்கை வந்தது ஏரோதிடம் திரும்பி போக வேண் டாம் என்று அன்பானவர்களே, ஏரோதிடம் திரும்பி போனால் என்ன நடக்கும் என்று நமக்கு தெரியும் இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் புத் தாண்டில் ஆண்டவர் தரும். எச்சரிக்கை இதுதான், இயேசுவை வணங் கிய, ஆராதித்த நீங்கள் மீண்டும். ஏரோதிடம் (பழைய பாதைக்கு ) போய் விடாதீர்கள் ஏரோதிடம் திரும்பி போனால் உங்களில் இருக்கும் இயே சுவை அவருடைய பிரசன்னத்தை நீங்கள் இழக்க நேரிடும்.
வந்த வழியே திரும்பி போகாதீர்கள் இனி நீங்கள்புதிய பாதையில் பயணிக்க வேண்டும் ஏரோது காத்து நிற்கிறான்.அவனுக்கு ஒரே நோக் கம் அவன், கொல்வதற்க்கும் அழிப்பதற்கும் திருடுவதற்க்குமே வருகி றான். ஆகவே மாற்று பாதையில் பயணிப்போம். பெற்றுக் கொண்ட இயே சுவை அவருடைய கிருபையை இழக்காமல் பேணி காப்போம்.
ஆமென்