

இயேசுவின் இறப்பும் அடக்கமும் நடந்து முடிந்தது. மூன்று பெண்கள் கல்லறையை நோக்கிச் செல்கின்ற னர். அவர்களுக்குப் பெரியதோர் பிரச் சனை, அவர்களின் வழிக்குத் தடை யாக ஒரு பெரிய கல் உள்ளது. அக் கல்லை யாரால் மாற்ற இயலும். இயேசு உள்ளே உள்ளார் என்று அவர்கள் அறிவர். தங்களுக்கு உதவ வலிமை வாய்ந்த ஆடவர் யாரும் இல்லை. ஆயினும் அவர்கள் முன் னோக்கிச் சென்றனர். அவர்கள் மனித ஆற்றலை நம்பவில்லை. இறையாற்றலை நம்பியே முன்னேறினர். அவர்கள் கல்லறையின் அருகில் சென்றபோது கல் மாற்றப்பட்டுள்ளது
நமது முன்னேயும் பெரிய கற்கள் உள்ளன. நாம் உதவிக்காக மனிதர் களிடம் ஓடுகிறோம். ஆனால் அது நம்மை எங்கும் கொண்டு செல்வதில்லை. அப்பெண்கள் ஒரு உண்மையை அறிந்திருந்தனர். அது, இயேசு உள்ளே இருக் கிறார், அவரால் பலவற்றை செய்ய இயலும் என்பதே ஆகும். இயேசு நம்மு டன் இருக்கிறார் என்று நாம் அறிவோம். ஆயினும் நாம் ஏன் பிறரை பின்தொடர்கிறோம். கடவுளிடம் நம்பிக்கை வைத்து முன்னேறுவோம். நமது வாழ்க்கையை உற்று நோக்கினால் நிகழ்ச்சிகள் பல நினைவில் வரும். பிரச்சி னைகளுடன் நாம் போராடின நாட்கள் இன்று அவை அனைத்தும் மறைந் துள்ளன. பிரச்சனைகள் வரும்பொழுதுதான் ஒருவரது நடத்தை வெளியாகி றது. நற்செய்தி அறிவிப்பவர்களிடமும் அது உள்ளது. பிரச்சனைகள் ஏற்படும் போது அவர்களும் இறைவனிடம் கேள்வி கேட்பர். இறைவனது செயல்கள் அனைத்தும் மிகச் சிறந்தனவாகும். அவரது கட்டளைகள் அனைத்தும் அவ ரது நாமத்தில் நிறைவுபெற்றுள்ளது. இதற்கு காரணம் யாது? என்று ஒருவருக் கும் கேட்க இயலாது. நடக்க வேண்டிய காலத்தில் அனைத்தும் நடந்தேறும். தக்க காலத்தில் நமது அனைத்துத் தேடுதல்களுக்கும் விடை கிடைக்கும்.
எனது வாழ்க்கையில் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படக் காரணம் யாது? நான் நாள்தோறும் திருப்பலியில் பங்கேற்கிறேன் அல்லவா? எனது அய லானுக்கோ துன்பம் ஒன்றும் இல்லையே? அவர்கள் அனைவரும் செழித்து வளருகின்றனரே? இது போன்ற கேள்விகளை கேட்கலாகாது. ஆண்டவர் குறிப் பிட்ட நேரத்தில் அனைத்தும் தெளிவுறும். நல்லவர்கள் துன்புறுவதையும், தீய வர்கள் இன்புறுவதையும் நீ காணலாம். “கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண், அவரது திருமுறைகளைக் கடைபிடித்து ஒழுகுவதாலும் படைகளின் ஆண்ட வர் திருமுன் மனம் வருந்தி நடந்துகொள்வதாலும் நமக்கு என்ன பயன்?” (மலா
3.14) “ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவரது பெயரை நினைந்து வாழ் வோருக்கென நினைவு நூல் ஒன்று அவர் திருமுன் எழுதப்பட்டது. நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் எனது தனிப்பெரும் சொத்தாக இருப் பார்கள்” (மலா 3:16,17) ஆண்டவர் ஒரு நாள் கருணை காட்டுவார். அன்று அனைத்து வினாக்களுக்கும் விடை கிடைக்கும். அன்று நல்லவனுக்கும், தீயவனுக்கும் உரிய வேற்றுமையை நீ காண்பாய் இப்பொழுது நீ காண்பது மறைந்துவிடும். அன்று காண்பது நிலைத்திருக்கும்
இயேசுவின் கல்லறையில் கல் மாற்றப்பட்டதாக நாம் காண்கி றோம். ஆனால் இலாசரை உயிர்பெற் றெழச் செய்தபோது கல்லறையின் மூடி அங்கே காணப்பட்டது. ஆண்ட வர் சூழ்ந்து நின்றவர்களிடம் கல்லை மாற்றக் கட்டளையிடுகிறார். ஆனால் இயேசுவின் உயிர்ப்பின்போது கல் மாற்றப்பட்டிருந்தது. ஒரு நிமிட நேரத் தின் ஒளியின் ஜோதியில் இது நிகழ்ந் தது. இறைவன் கல்லறையின் அரு கில் நிற்கிறார். அவரால் அக்கல்லை மாற்ற இயலும், அவரில் நம்பிக்கை வைப்போம். அவர் அரும்பெரும் செயல்கள் ஆற்றுவார் என்ற நம்பிக் கையில் அல்லவா நற்செய்தி கேட்கச் செல்கிறோம். அவருக்கு அதிசயங் கள் செய்ய இயலும், ஆனால் நம்பிக் கையில்லாமல் இருந்தால், உனக்கு உதவி செய்வதற்கான நிலை ஏற்பட இறைவனுக்கும் வாய்ப்பில்லை. இயே சுவால் பெரியமலைகளையும் மாற்ற இயலும். இச்சிறு கற்கள் அவர்முன் எம்மாத்திரம்.
மத்தேயு நற்செய்தியில் கல் லை யார் உருட்டியதாகக் காண்கி றோம். ஒரு இறைதூதர் அதற்குப்பின் அவர் என்ன செய்கிறார். கல்லில் அமர்ந்து நற்செய்தி அறிவிக்கிறார். உங்களுக்கு இப்பொழுது பிள்ளை இல்லாமல் இருக்கலாம். நாளை நீங் கள் கூறலாம். நான் இறைவனின் முன் அழுகுரல் எழுப்பி மன்றாடி னேன். அவர் எனக்கு குழந்தைச்
செல்வத்தை அளித்தார் என்று உங்களது துன்பங்கள் உங்களை இயேசுவிற்கு சாட்சிகள் ஆக்கும். தியான மையத்தில் பலர் சான்று கூறுகிறார்கள். பிரச்ச னைகள் இல்லாமல் இருந்தால் எவ்வாறு சாட்சி கூற இயலும், பிரச்சனைகள் எழட்டும், அவை பலரை இயேசுவிடம் கொண்டு வரலாம். நோய் இல்லாமல் நோய்விடுதலை எவ்வாறு ஏற்படும். இரவில்லாமல் பகல் எவ்வாறு ஏற்படும். துக்கவெள்ளி இல்லாமல் உயிர்ப்பு ஞாயிறு வர வாய்ப்பில்லை அல்லவா.
கல்லறையை நோக்கி வந்த அப்பெண்கள் அது வெற்றுக் கல்லறை மட்டுமே. அதில் இயேசு இல்லை என்று தெரிந்து கொள்ளவில்லை. இறைதூ தர் அவர்களிடம் கூறினார். நேரம் வீணாக்காமல் இயேசுவின் சீடர்களிடம் சொல்லுங்கள். நமது மீட்பு இயேசுவிடமிருந்தே வருகிறது. ஆனால் நாம் வெற்றுக் கல்லறைகளை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறோம். நான் இயே சுவிற்கு உதவி புரிவேன் என்று தானாகவே எண்ணுகிறோம். நமக்கு அவரிடம் தயை தோன்றலாம். அது நமது நன்மையாகும். எருசலேம் பெண்கள் அவரைக் கண்டு அழுதனர். நாமும் அந்த பெண்களைப் போன்றோர் ஆவோம். இன்று இயேசு நம்மிடம் “நீங்களே என்னை சிலுவையில் அறைந்துள்ளீர், வேறு யாரும் அல்லர்’ என்று கூறுகிறார். எபிரேயர் திருமுகம் கூறுகிறது. “ஒருமுறை ஒளியைப் பெற்று. விண்ணகக் கொடையைச் சுவைத்தவர்கள், தூய ஆவி யைப் பெற்றவர்கள் ஆவர். கடவுளின் நல்ல வார்த்தையையும் வரவிருக்கும் உலகின் வல்லமையையும் சுவைத்த இவர்கள் நெறி பிறழ்ந்துவிடின், இவர் களை மனம் மாற்றி, மீண்டும் புத்துணர்வு பெறச் செய்வது அரிது, ஏனெனில், இவர்கள் இறைமகனைத் தாங்களே சிலுவையில் அறைந்து, வெளிப்படையாக இழிவுபடுத்துகிறவர்கள் ஆவர் (6:4-6)
வெற்றுக்கல்லறையில் நின்று இயேசுவுக்கு நமது கண்ணீர் வேண் டும் என்ற அர்த்தத்தில் நாம் அழுகிறோம். கூடாது. உலகத்திற்கு மீட்பு வேண் டும். உங்கள் சகோதரர்களிடம் செல்லுங்கள். நாம் நமக்காக, நமது குடும்பங்க ளுக்காக, மனைவிக்காக, கணவனுக்காக அழுகிறோம். அத்தனையும் போதாது. எரேமியா இறைவாக்கினர் கூறுகிறார். “உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ, அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்; அந்நகருக் காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள், ஏனெனில், அதன் நல்வாழ்வில்தான் உங் கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது (29:7) உங்கள் நல்வாழ்வு நீங்கள் வாழும் நாட்டினை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தியாவில் புதிய அரசு வந் ததால் மாற்றங்கள் பல வரும். எனக்கு ஒன்றும் ஆகாது என எண்ணலாகாது. திமொத்தேயுக்கு எழுதின முதல் கடிதத்தில் கூறுகிறார். “அனைவருக்காகவும் மன்றாடுங்கள், இறைவனிடம் வேண்டுங்கள், பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத் துங்கள். முதன் முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப் பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள்”(2:1-2)
நமது ஆட்சியாளர்களுக்காகவும், அரசர்களுக்காகவும், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் ஆகியவர்களுக்காகவும் நாம் மன்றாட வேண்டும். மதத் தலைவர்கள் பாவத்தில் வாழ்ந்தால் உங்கள் நம்பிக்கை எவ்வாறு உறுதி பெ றும். நாளை நமது குழந்தைகள் எவ்வாறு பாதுகாப்பு பெறுவார்கள். ஆகை யால் இறைவன் விரும்புவது போன்று உங்கள் தலைவர்களுக்காக மன்றாடுங் கள், உலகத்திற்கு மீட்பின் செய்தியை அறிவியுங்கள், அவரைச் சிலுவையில் அறைவதை நிறுத்துங்கள். வெற்றுக் கல்லறைகளின் முன் அழுது நேரத்தை வீணடிக்காதீர், இன்று நீங்கள் ஒரு பிரச்சனையால் துன்பத்தில் ஆழ்ந்திருக்க லாம் நாளை நீங்கள் அதன்மீது ஏறி நின்று பேசுவீர்.
