விலாவில் ஈட்டியா?

யேசு கிறிஸ்துவில்
அன்பானவர்களே, தவக்காலம் துடங்கிவிட்டது. பாடுகளை தியா னிக்கிற நாட்கள்தான் இனி வரு கின்ற நாட்கள் நம்முடைய வாழ்க்கையில் பாடுகளை தவிர்த்து ஒரு வாழ்வு என்பது இல்லை சீராக் 2:4-ல் நாம் இப் படி வாசிக்கிறோம் “என்ன நேர்ந் தாலும் ஏற்றுக்கொள் இழிவு வரும்போது பொறுமையாக இரு என்று மிகவும் ஆழமான கருத்துள்ள வசனம் இது. வாழ்க்கையில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில காரியங்கள் நடந்து கொண்டேயிருக்கும். எல்லாம் சாதகமாக போகும்போது நமக்கு மிக மகிழ்ச்சியே அதே வேளையில் துன்பம் வரும்போது அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம் அப்படி சோதனை கள் பாடுகள் வரும்போது அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று விவிலியம் கற்றுக்கொடுக்கிறது. யாக் 1:2-ல் ஆண்டவர் கூறு கின்றார். ‘என் சகோதர சகோதரிகளே, பல வகையான சோதனைக ளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என் பதைக் கருத்தில் கொண்டிருங்கள்” சோதனைகள் கண்டிப்பாக வரும் அதை ஏற்றுக்கொள்ள வேண் டும். அதுவும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என் கிறார் ஆண்டவர்.
நீங்கள் பாழும் கிணற்றில் உங்களுடைய நெருங்கிய உறவு களால் தள்ளப்படலாம் ஆனால் நீங்கள் பாழும் கிணற்றில் தள் ளப்படும்போது அங்கிருந்து தூக்க வல்ல ஒரு கரம் உண்டு என்பதை மறவாதீர்கள் ஒருபோ தும் நீங்கள் பாழும் கிணற்றில் தள்ளப்பட்டதை நினைத்து வருத் தப்பட வேண்டாம், உங்களை தள்ளினவர்களிடம் யுத்தம் செய்ய போக வேண்டும் உங்கள் முதுகில் ஏன் குத்துறாங்க என்
றால் நீங்கள் அவர்களைவிட ஒருபடி முன்னால் இருங்கிங்க அதுவே காரணம் உங்கள் முதுகில் குத்தும்போது ஒருவகையில் நீங்கள் மகி ழலாம். ஏனென்றால் யார் உங்களை குத்தினார்களோ அவர்களை விட நீங்க ஒருபடி முன்னேறி இருக்கிங்க எல்லாவகையிலும் உங்க ள் முதுகில் குத்தினவர்களைவிட முன்னேறி இருக்கிங்க, அதை அவர் களால் தாங்கமுடியவில்லை அப்படி முதுகில் குத்தும்போது நீங்கள் பொறுமையாக இருங்கள், உங்கள் விலாவில் ஈட்டியை பாய்ச்சு வார்கள், கண்ணத்தில் அறைவார்கள். காரி உமிழ்வார்கள், நிர்வா ணப்படுத்துவார்கள் அப்பொழுதுதெல்லாம் நீங்கள் பொறுமையாக இருங்கள் நீங்கள் பொறுமையா இருந்தால் நீங்கள் எங்கே, யாரால் பாழும் கிணற்றில் தள்ளப்பட்டீர்களோ, அவர்கள் முன் ஆண்டவர் உங்களை உயர்த்துவார்.
இந்த பாடுகளின் நாட்களில், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்து கொண்டிருக்கிற எல்லா நிந்தைகளையும் அவமானங் களையும் ஆண்டவரின் பாடுகளோடு இணைத்து வையுங்கள் உயிர்ப்பு நிச்சயம் உண்டு