விண்ணகத் தந்தை நடாத அனைத்தும் பிழுது மாற்ற வேண்டியனவாகும்

இயேசுவை மிக நெருக்க மாக பின்பற்றின சீடர்களில் முக்கியமா ளவர்கள் பேதுருவும், அவரை காட்டிக் கொடுத்த யூதாசும் (மாற்கு14:35-46

ஆவர். இறைவனின் உருவிலும், சாயலிலும் படைக்கப்பட்ட அனைத்து மக்களைக் குறித்தும் இறைவனுக்கு திட்டங்கள் உள்ளன. ஆதாமைக் குறித்தும் மரியாவைக் குறித்தும் அவருக்குத் திட்டங்கள் இருந்தன. அதுபோன்று பேதுருவைக் குறித்தும், யூதாசைக் குறித்தும் தனக்கு மட்டும் தெரிந்த திட்டங்களை ஆண்டவர் தீட்டியிருந் தார்.

“ஆண்டவராகிய கடவுள் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தை யும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்” (தொ.நூ 29 ஆண்டவர் ஆதாமிடம், “தோட் டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே. ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய் தொநூ 2:1617 என்று கூறினார். இறைவனின் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் வாழ்வோம். அதை புறக்க ணித்தால் சாவோம். இறையழைப்பை ஏற்றுக் கொள்ளுதல் என்றால் இறைத்திட் டத்தைப் பகுத்தறிந்து, அதற்காக செயல்படுவதே ஆகும். நாம் அதை சுதந்திரமாக

ஏற்றுக்கொள்ள வேண்டும். பேதுருவி னுடைய, யூதாசினுடைய வழிகள் நமக்களிக்கும் செய்தி இதுவே
சிமியோன் என்ற பெயரின் பொருள் இளகுகின்ற மண் என்பதா கும். விசுவாச வாழ்க்கையிலும், இயே சுவை பின் செல்வதிலும் சீமோன் பேதுரு ஒரு இளகுகிற மண்ணாக இருந்தார். ஆனால் யூதாசோ இஸ்ர யேலின் உலக ரீதியான மீட்பை விரும்பியவர் ஆவார். அவ்வாறிருக் கவே இயேசுவைக் குறித்து அறிந்தார். அவரைப் பின்தொடர்ந்தார் இயேசு வின் ஆற்றல்களும், அவரது புது மைகளும் அதற்கு வழிவகுத்தது.
பேதுருவினுடைய யூதாசினுடைய தனிப்பட்ட வலிமைகளை விட இயேசுவைப் பின் பற்ற அவர்களுக்கு அளித்த அழைப்பே முக்கியமானது என்று அவர்களின் பிற்கால வாழ்க்கை விளக்குகிறது. அவர்கள் இயேசுவை பின்தொடர்ந்தார்கள் என்றாலும், அவர் தந்த முன்னறிவிப்புகளை பெற்றுக்கொண்டு வாழ்வதில் தவறு ஏற்பட்டுள்ளது.
இயேசு பேதுருவிடம், “பேதுருவே, இன்றிரவு ‘என்னைத் தெரியாது’ என மும் முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது” (லூக் 2234) என்று கூறினார். யூதாசிற்கு வர விருந்த அழிவைக் குறித்தும் அவர் முன்னறிவித்துள்ளார். உங்களுள் ஒருவன் என் னைக் காட்டிக் கொடுப்பான்’ (மத் 2621) இயேசுவை காட்டி கொடுப்பதற்கு சற்று முன்பு வரை இயேசு அவனது மனமாற்றத்தை எதிர்நோக்கி இருந்தார். ‘யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய் ? (லூக் 22:48) என்று இயேசு யூதாசி டம் கேட்கிறார்.
நாமும் இதுபோன்று செய்யக் கூடாதவற்றை செய்யும்பொழுதும். விரும்பதகா தவற்றை விரும்பத் தொடங்கும்பொழுதும் அனேகமுறை இறைவனால் எச்சரிக்கப்படு கிறோம். வாழ்க்கை புதுப்பித்தலை விரும்புகின்ற நாம் அதைப் பகுத்தறிய வேண்டும். வாழ்க்கையை திருத்த வேண்டும். இறைத் திட்டத்திற்கு ஏற்ப நடக்க வேண்டும்.