துன்பம் விளைந்தது நன்மைக்கே

யேசு கிறஸ்துவில் அன்பானவர்களே, இந்த மாதங் கள், நாட்கள் நம்மையே நாம் தூய் மையாக்கவும், குறைகளை கண்ட றிந்து அதை களையவும்,புதிய படைப்பாக மாறவும் இந்த நாட் களை நாம் பயன்படுத்த வேண்டும். (தியா 119:71-ல் ஒரு வச னம் உண்டு ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார். “துன்பம் எனக்கு விளைந்தது நன்மைக்கே என்று. அதைப்படி துன்பம் வந்தது. வருவது நன்மையாக இருக்க முடியும்? அதைதான் நாம் சற்று சிந்திக்க போகி றோம் இயேசு கிறிஸ்துவில் அன்பானவர்களே. ஒரு துன்பம் வரும் போதுதான் உறவுகள் யாரென்றும், அவர்களுடைய உண்மையான குணம் என்றும், யார் உங்களை நேசிப்பவர்கள் என்றும், புறக்கணிப்ப வர்கள் என்றும் புரிந்து கொள்ள இயலும் ஒரு துன்பம் வரும்போது உங் களுடைய நெருங்கிய உறவே உங்களை பழிக்கும், ஊரில் நல்லவர்கள் போய் காணப்படும் சில ஆட்களின் உண்மையான மனது என்ன என்ப தையும் அறிய முடியும் பழைய ஏற்பாட்டில் யோசேப்பின் வாழ்வை பாருங் கள், சொந்த உறவுகளால் பழிவாங் கபட்டு பாழும் கிணற்றில் தள்ளப் படுகிறார். அடிமையாக விற்க்கப் படுகிறார். ஆனால் அந்த துன்பம் வந்ததால்தான் அவரை அவமா னப்பட்ட அதே இடத்தில் தெய்வம் உயர்த்துகிறார். யார் ஆவமானப் படுத்தி சிறையில் தள்ளினார் களோ, அதே நாட்டிலேயே ஆண் டவர் உயர்ந்த இடத்திற்க்கு கொண்டு வந்தார்.
நீங்கள் யோபுவினுடைய வாழ்வை பாருங்கள் பெரிய செல் வந்தர், பத்து குழந்தைகள் குடும் பம் என்று வாழ்ந்த ஒரு மனிதர். ஆனால் அலகையால் சோதிக்கப் பட்டு எல்லாம் இழந்து, குறிப்பாக நோயுற்று இருக்கும்போது, நோயா ளியான அவரை எல்லாம் இழந்த அவரை பரிகசித்து,செத்துபோக சொல்லுகின்ற ஒரு மனைவியை
பார்க்கிறோம். அவர் செல்வந்தனாக இருந்தபோதோ, எல்லாம் நிறைந்த வராக இருந்தபோதோ யோபுவினுடைய மனைவியின் குணத்தை அவ ரால் அறிய முடிந்ததா?
1.சாமு ஒன்றாம் அதிகாரத்தில் அன்னாவின் வாழ்க்கையை பார்க்கின்றபோது, தனக்கு குழந்தை இல்லையே என்று கோவிலில் வைத்து கண்ணீர் வடிக்கின்றபோது பெரிய மனுஷன்,இறைவாக்கினர் என்ற போர்வையில் இருக்கின்ற ஏலியின்உண்மையான குணத்தை அறிய முடிகிறது. அன்னாவினுடைய வேதனையுமந் கண்ணீரும் அவ மானமும் ஏலிக்கு கேலியாக தெரிகிறது. குடிகாரி என்று பழிக்கிறார். அப்போ அன்னாவை பொருத்தமட்டில் அவருக்கு குழந்தையில்லா தது நன்மைக்கே, ஏனென்றால் அதனால்தான் ஏலியின் குணத்தை அவ ரால் அறியமுடிந்தது.
இறுதியாக யோவான் 9-ம் அதிகாரத்தில் பிறவியிலேயே பார்வை இழந்த மனிதனை கண்டு இயேசு ஆண்டவரின் சீடர்களே,கேட்கிறார் கள் இவன் பிறவியிலேயே பார்வையற்றவனாக பிறந்தது யார் செய்த பாவம் என்று கேட்கிறார்கள். நீங்கள் ஆண்டவருடைய ஊழியனாகவே இருந்தாலும், ஒரு துன்பத்தை.ஒரு நோயை எப்படி பார்க்கிறீர்கள் என் பது மிக முக்கியம் ஒரு துன்பம் வரும்போதுதான் நீங்க நல்ல கள்வனா, கெட்ட கள்வனா என்று அறிய முடியும்.
ஆகவே பிரியமானவர்களே, துன்பம், நோய், கடன் அவமானம் வரும்போது அதை கண்டு துவண்டு விடாமல்,எல்லாம் நன்மைக்கே என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள் ஆண்டவர் எல்லாவித நன்மைக ளாலும், நலன்களாலும் நிரப்புவாராக ஆமென்.