

இயேசு கிறிஸ்துவில் அன்பானவர்களே,இதோ தவக்காலம் நம்மையே புடமிடப்படுகின்ற நாட்கள். நாம் என்ன செய்யபோகிறோம் எப்படிப்பட்ட மனநிலையோடு அதை அணுக இருக்கிறோம். புனித பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமு கத்தில் பத்தாவது அதிகாரத்தில் பதிமூன்றாம் வசனத்தில் இவ்வாறு கூறுகி றார். பொதுவாகவேஎல்லோருக்கும் சோதனை உண்டு, நமக்கும் சோதனை உண்டு என்கிறார் நம்முடைய வலிமைக்குமேல், நம்மால் எவ்வளவு தாங்க முடியுமோ அந்தளவுக்குதான் ஆண்டவர் சோதனையை அனுமதிப்பார். சோதனையை தருவதுமட்டுமல்ல அதை தாங்கவும் பெலன் அருளுகி றார் சில ஆட்கள் என்னால் இந்த சோதனையை தாங்க முடியவில்லையே என்று எண்ணும்போது புலம்புபோது அதிலிருந்து விடுபடக்கூடிய வாழ்க்கை திறந்துக் கொடுப்பார். ஆனால் கடவுளை நீங்கநம்பவேண்டும் விசுவாசமே அனைத்திற்க் கும் ஆணிவேர் ஆண்டவரை நீங்கள் நம்பினால் எம்மலையையும் பெயர்ந்து கடலில் விழச் செய்வார் சோதனையை கண்டு புலம்பாதீர்கள் சிலுவை வழியாகவே ஆண்டவரை காண இயலும் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

