
ரீனா
மூணார்
எங்களுக்கு திருமணமாகி 7 வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மிகவும் மனவருத் தத்தோடு இருந்தோம். இந்நிலையில் ஒரு சகோதரர், முரிங்கூர் டிவைன் தியான இல்லத்தில் தியானம் செய் துவிட்டு வந்தவர், அங்கு நடந்த அற்புத அடையாளங்களை எங்களிடம் பகிர்ந்தார். ஆதலால் நாங்களும் முழு விசுவாசத்தோடு டிவைனிற்கு வந்தோம். எங்களுடைய குறையை தேவனின் திருப்பாதத்தில் வைத்து ஜெபித்தோம். தியானம் முடிந்து மனதில் நம்பிக்கையோடு வீட்டிற்கு சென்றோம். எங்களுக்கு குழந்தை வரம் தந்து தெய்வம் ஆசீர்வதித்தார். இதை நானும் என் மனைவியும், குழந்தையோடு சாட்சியப்படுத்துகிறோம். இயேசுவே உமக்கே புகழ்! இயேசுவே உமக்கு நன்றியப்பா!
ரத்தினம் (69) திருநெல்வேலி
எனக்கு கடந்த 15 வருடங்களாக வலது கால் மூட்டில் கடுமையான வலி இருந்து வந்தது. எத்த னையோ மருத்துவர்களை கண்டு மருந்து, மாத்திரைகள் உட்கொண்டும் முழுசுகம் கிடைக்கவில்லை. முரிங் கூர் டிவைன் தியான இல்லத்தை பற்றி அறிந்தேன். தியானத்தில் பங்கு கொண்டேன். நல்லதொரு பாவசங் கீர்தனம் செய்து முழுமனதோடு ஜெபித்தேன். வியாழக்கிழமை அருள்தந்தை மாத்யு இலவுங்கல் அவர்கள் வழிநடத்திய ஆராதனையில் ஆண்டவர் முழு சுகமளித்து ஆசீர்வதித்தார். அன்று முதல் எனக்கு மூட்டு வலியே இல்லை. என்னை நலமடைய செய்த தெய்வமே உமக்கு நன்றி! இயேசப்பா உமக்கு நன்றி!
ராஜா
திருநெல்வேலி
எனக்கு 2 வருடத்திற்கு முன் கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை செய்தும் கண் மங்கலாகவே தெரிந்தது. நான் கேரளாவில் உள்ள டிவைன் தியான இல்லத்திற்கு வரவேண்டும் என்று வேண்டினேன். அதே போல ஒரு ஞாயிற்றுகிழமையன்று டிவைன் தியான இல்லத்தை வந்தடைந்தேன். தியானத்தில் முழுமையாக எனக்கு பார்வை கிடைக்கும் என்ற விசுவாசத்தோடு பங்கு கொண்டேன். செவ் வாய்கிழமை ஆராதனை வேளையில் ஏதோ ஓர் ஒளி என் கண்ணில் பாய்வது போல உணர்ந்தேன். அதே நிமிடத்தில் எனக்கு கண்பார்வை முழுமையாக கிடைத்தது. நான் பூர்ண சுகமடைந்தேன். என் இயேசு தெய்வத்திற்கு கோடான கோடி நன்றி!
ஞானமேரி கன்னியாகுமரி
5 வருடத்திற்கு முன்பு சிக்கன்குனியா காய்ச்சலால் நான் தாக்கப்பட்டேன். அன்றிலிருந்து என் பின் னந்தலை மிகவும் பாரமாக இருக்கும், கை, கால், உடல் முழுவதும் வலியால் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு இருந்தேன். இரவு வேளையில் வலி அதிகமாக இருக்கும். மருந்து, மாத்திரைகள் பலவற்றை சாப்பிட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. முரிங்கூர் டிவைன் தியான இல்லத்திற்கு தியானிக்க வரும்போது மிகுந்த பாரத்தோடு வந்தேன். செவ்வாய்கிழமை ஆராதனை வேளையில் ஏதோ பெரிய பாரம் ஒன்று என் பின்னந் தலையிலிருந்து கழன்று போவதாக நான் உணர்ந்தேன். அதே நேரத்தில் ஆண்டவர் என்னை தொட்டு குணப்படுத்தினார். அன்றிலிருந்து என் தலையில் எந்த வலியும், பாரமும் இல்லை. தெய்வத்திற்கு நன்றி!
செல்வி
சென்னை
எனக்கு 13 வருடத்திற்கு முன்பு வலது மார்பில் கேன்சர் கட்டி வந்தது. அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு சிறிது காலம் கழித்து இடது மார்பகத்திலும் கட்டி வந்தது. மறுபடியும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தோம். மருத்துவர் பரிசோதித்து விட்டு இதுவும் கேன்சர் கட்டி தான், இதையும் அறுவை சிகிச்சை மூலம்தான் குணப்படுத்த முடியும் என்றார். மிகவும் கவலைப்பட்டு கொண்டு கடந்த சில மாதத்திற்கு முன்பு நானும் என் கணவரும் முரிங்கூர் டிவைன் தியான இல்லத்தில் வந்து தியானம் கூடி னோம். செவ்வாய்கிழமை நல்லதொரு பாவசங்கீர்தனம் செய்து திருப்பலியில் கண்ணீரோடு, ‘இது கேன்சர் கட்டியாக இருக்க கூடாது. இனி எந்த அறுவை சிகிச்சையும் எனக்கு நடக்கக்கூடாது’ என்று வேண்டிக் கொண்டேன். விசுவாசத்தோடு தியானம் முடிந்து வீட்டிற்கு சென்றேன். சிறிது நாள் கழித்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்தேன். ‘அது கேன்சர் கட்டியில்லை, நீர்கட்டிதான், அறுவைசிகிச்சை செய்ய வேண்டாம்’ என்று டாக்டர் சொன்னார். முன்பு வலது பாகத்தில் அறுவை சிகிச்சை செய்ததும் வலி நீங்கி சுகம் கிடைத் தது. நான் கேட்டதை நிறைவேற்றி கொடுத்த தெய்வமே உமக்கு நன்றியப்பா. இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி!
