

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா வினை கொண்டாட தயார் நிலை யில் இருக்கும் நாம். அவரது பிறப்பு அன்று எவ்வாறு எதிர்ப்பின் அறி குறியாக அமைந்திருந்தது என்
பதை உள்வாங்கி. நமது வாழ்விற்கு இயேசுவின் பிறப்பு வழங்கும் சவாலை ஏற்று, நாமும் சமூக எதிர்ப்பின் அறிகுறிகளாகத் தொடரத் தூண்டும் சிறுமுயற்சியே இக்கட்டுரை இயேசுவின் பிறப்புச் செய்தியே எதிர்ப்பு அறிகுறியின் ஆரம்பம்.தந்தை வழிச் சமுதாயமாகவும் ஆணா திக்கக் கலாச்சாரமாகவும் தன்னை வெளிப்படுத்தி பெருமை கொண்டது யூதச் சமூதாயம் பணிவு, சார்பு நிலை.அடக்கம். ஏற்று வாழ்தல் முதலியன பெண் இனத்தின் இலக்கணங் களாகப் போற்றப்பட்டன யூத சமூக வாழ்வில், பொது வாழ்வில் பெண்களுக்கு இடம் இல்லை. சமூக அந்தஸ்து அப்புறப்படுத்தப் பட்டது. சமயத்திலும் இரண்டாம் தரமே அளிக்கப்பட்டது. இத னால்தான் கடவுள் தங்களைப் பெண்களாகப் படைக்காமைக் காக யூத ஆண்கள் அவருக்கு அன்றாடம் நன்றி செலுத்தி வந் தார்கள். இப்படிப்பட்டச் சூழலில் இளம் பெண்ணான மரியாவை இயேசுவின் தாயாகத் தேர்ந்தெ டுத்து பிறப்புச் செய்தியினை வழங்கி, வானதூதர்களின் வாழ்த் துக்குரியவராக உயர்த்தியது எதிர்ப் பின் அறிகுறிக்கு முதல் வித்து.
அன்னை மரியாவில் தொடங்கி வைக்கப்பட்ட எதிர்ப் பின் அறிகுறி இயேசுவின் பிறப் பில் முழுமை பெற்றது என்பது வர லாற்று உண்மை. தாம் பெற்றெ டுத்த மகனை மோசேயின் சட்டப் படி தூய்மைச் சடங்கு நிறை வேற்ற, மற்றும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்க மரியாவும் யோசேப் பும் எருசலேமிலுள்ளஆலயத்திற் குக் கொண்டுச் சென்றனர். அங்கே நேர்மையாளரும், இறைப்பற்றாள ருமான சிமியோன் மரியாவை நோக்கி “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரண மாக இருக்கும் எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்”(லூக் 234) இந்த இறைவாக்கு இயேசுவின் பிறப்பை எதிர்ப்பின் அடை யாளமாக முதன் முதலில் உலகுக்கு உணர்த்தியது.எனவேதான் இயே சுவின் பிறப்பு பலருக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகவும் (லூக் 2:34) சில ருக்கு அச்சம் அளிக்கும் செய்தியாகவும் வெளிப்பட்டது. இயேசுவின் பிறப்புச் செய்தி அனைத்தையும் அனுபவித்து ஆட்சி செய்த ஏரோது அரசனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது என்பதிலிருந்து அது எதிர்ப்பின் அறிகுறி என்பது தெளிவு “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்தி ருக்கிறோம்’ என்றார்கள் (ஞானிகள்) இதைக் கேட்டதும் ஏரோது அர சன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று (மத் 2:2-3)
இன்றைய மனிதர்களை மூன்று வகையினராகப் பிரிக்கலாம். முதல் பிரிவினர் ‘ஆம்’ வகையைச் சார்ந்தவர்கள் இந்தகைய மன நிலை கொண்டவர்கள் சமூக நிகழ்வுகளில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் பங்கெடுப்பவர்கள். யார் எதைச் செய்தாலும் சொன்னாலும் ஆம் என்று ஆமோதிப்பார்கள். தங்கள் கொள்கையை சுயநலத்திற்கா கக் சமரசம் செய்து கொள்பவர்கள்.
இரண்டாம் பிரிவினர் “இல்லை” நிலைப்பாடு கொண்டவர்கள். இவர் கள் எதிர்மறை மன நிலையைக் கொண்டவர்கள். நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளை எதிர்க்கும் எண்ணம் கொண்டவர்கள் இவர்களால் எதையுமே பாராட்ட இயலாது. பிறரிடத்தில் குறைகளை மட்டும் பார்த் துப் பரசப்படுபவர்கள். இவர்களால் சமூகத்திற்கு எந்த பங்களிப்பும் ஏற்ப டாது.
மூன்ராவது பிரிவினர் ‘ஆம் என்றால் ஆம். இல்லை என்றால் இல்லை” என்ற நேர்மறைச் சிந்தனை கொண்டவர்கள். இவர்களால் சமூக அவலங்களைக் கண்டு அமைதியாக இருக்க இயலாது. நிலைப் பாடு எடுத்து நலைதை வரவேற்பதும், தீயதைஎதிர்ப்பதும் இவர்களது இயல்பாகும். இவர்கள் சமூக வளர்ச்சிக்கு தங்கள்பங்களிப்பைத் தொடர் னது அளிப்பார்கள்இவர்கள்தான் உம்மையான எதிர்ப்பின் அறிகுறி கள். இவர்களில்தான் இயேசுவின் பிறப்பு அர்த்தம் பெறுகிறது. “நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் எனவும், இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள்” (மத் 5:37)
இத்தகைய மனிதர்களில் நாம் எந்த நிலையைச் சார்ந்தவர்கள் என்று எண்ணிப் பார்ப்போம். முதல் இரண்டுவகையினரை அப்புப்படுத்தி, மூன் றாவதுவகையை நமதாக்குவோம். அப்பொழுது இந்த ஆண்டு இயேசு வின் பிறப்பு விழா அர்த்தம் நிறைந்ததாக அமையும்.
