

மத்4:16 காரிருளில் இருந்த மக் கள் பேரொளியைக் கண்டார்கள். தொ.நூ 1:2 வார்த்தையில் காண் கிறோம் மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவி இருந்தது
இருள் சூழ்ந்த நிலை நம்மைப் பயப்படுத்துகிறது. இருட்டு நிறைந்த அறைக்குள் என்ன நடக்கிறது என்ன இருக்கிறது என்று கண்டு பிட்ப் பது கடினமாக இருக்கும். இருளில் நடப்பது கூட கடினமாக இருக்கும் நம்முடைய கால் தடுக்கி விழவும் வாய்ப்புண்டு. எங்கே பயணம் செய்கி றோம் என்பதை புரிந்து கொள்ள முடியாது. இந்த நிலையினை மாற் றவே கடவுள் ஒளியைப் படைத்தார். ஒளி இருந்தால் எல்லாவற்றையும் தெளிவாகக் காண முடியும். நம்முடைய பயணமும் இலகுவாக மாறும் பெரிய மகிழ்ச்சியிந் அனுபவம் கிடைக்கும்
இயேசு இந்த பூவுலகில் பிறந்த போது அவர் மக்க ளுக்கு ஒளியாய் விளங்கினார். மத் 4:16, ஏசாயா 9:2லும் இந்த நற்செய்தியைக் காண்கிறோம். ஞானம் 18:14-16 வசனம் நம்மை நினைவூட்டுகிறது. (எல்லாம் அமைதியில் இருந்த போது நள் ளிரவு கடந்து விட்டது. கடவு ளின் வல்லமையான வார்த்தை பூமியில் இறங்கி வந் தது. அந்த வார்த்தையே கட வுளாயிருந்தார் யோவான் 1:1 தொடக்கத்தில் வாக்கு இருந் தது அவ்வாக்கு கடவுளோடு இருந்து. அவ்வாக்கு கடவுளுமா யிருந்தது.
இயேசுவின் வருகையின் நோக்கம் மனிதனின் இருளை மாற்றுவதற்க்காகவே. இயேசு கிறிஸ்துவின் ஒளி இருளிலும் ஒளிர்கின்றது. அந்த ஒளியை மேற்க்கொள்ள அருளால் முடி யவில்லை. யோவான் 15 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது இருள் அதன் மீது வெற்றி கொள்ள முடியவில்ல. சக்கிரியா இறை
வாக்கு புத்தகத்திலும் இதை காண முடிகிறது. லூக்கா 1:78,79-ல் இருளி லும் இறப்பின் முடியில் இருப்பவர்களுக்கு ஒளி தரவும் நம்முடைய கால் களை அமைதியின் வழியில் நடக்கச் செய்யவும் நம்முடைய கடவுளின் பரிவுள்ளதாலும் இரக்கத்தாலும் விண்ணலிருந்து விடியல் நம்மை தேடி வருகிறது. இயேசு தனது வெளிப்படையான வாழ்க்கையிலும் இதை நமக்கு தெளிவாக அறிவித்துள்ளார். (யோவான் 8:12 உலகில் ஒளி நானே என்னை பின் தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியை கொண்டிருப்பார்
உலகத்தின் அந்தகார இருளை மாற்ற வந்த இயேசு நம்மோடு கூறுகி றார் மத் 5:14-ல் நீங்கள் உலகுக்கு ஒளியாய் இருக்கிறீர்கள் என்று இயேசு உலகிற்கு ஒளியாய் இருப்பது போல் கிறிஸ்துவர்களாகிய நாமும் ஒளி யாக மாற வேண்டும் என விரும்புகிறார். இயேசு சொன்னார் “உலகத்தில் நான் இருந்த போது உலகத்திற்கு ஒளியாய் இருந்தேன். அவரைப் போல நாமும் ஒளியாக வெளிச்சம் தர வேண்டும் (யோவான் 9:5) அது தான் நம் முடைய தெய்வீக அழைப்பு.
இருளின் வல்லமையின் பிடியில் சிக்குண்டு கட்டப்பட்டுகிடக்கிற இந்த தலைமுறையினரை மீட்க வேண்டுமென்றால் இயேசுவை பின்பற்றுகின்ற நாம் ஒவ்வொருவரும் ஒளிக்கும் சாட்சியாக நாம் வாழ வேண்டியுள்ளது. இது தான் கிறிஸ்துவர்களை பெரிய பொறுப்பு.
டிசம்பர் மாத தொடக்கத்தில்யே நாம் வீடுகளில் இயேசுவின் வரு கையை அறிவிப்பதற்காக நட்சத்திர விளக்குகளை தொங்க விடுகிறோம். அதோடு அழகான மின் விளக்குகளால் வீடுகளை அலங்கரிக்கின்றோம். இதனால் எல்லா இடங்களிலும் பெரிய மகிழ்ச்சியின் கொண்டிட்டத்தைக் காண முடிகிறது. பிறருக்கு நாம் ஒளியாக மாறுவதற்கு ஒரு வெளிப்படை யான அடையாளங்களே இவைகள் தீமையை விட்டு விலகி புனித யான புதிய வாழ்க்கை வாழுவதற்கான உறுதி மொழியாகும் உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

புனித அன்னை தெரேசா தான் வாழ்ந்த காலத்தில் கல் கொத்தா தெரு வீதிகளிலுள்ள உள்ள ஏழைகளின் வீடுக ளுக்கு செந்று வருவது வழக்கமாயிருந்தது ஒருநாள் ஒரு சின்ன குடிசை வீட்டுக்கு சென்று திரும்பிவரும்போது அந்த வீட்டிலுள்ள குடும்ப தலைவனும் தலைவலியும் சொன்னர் கள் அம்மா நீங்கள் என்றும் எங்க வீட்டுக்கு வரவேண்டும் உங்களுடைய அன்பான புண் சிரிப்பால் எங்கள் வீடு முழு வதும் ஒளியாக மாறிவிட்டது எங்களுக்கும் இப்பொழுது சிரிக்க முடிகிறது என்றார்கள்.
