

புதிய ஏற்பாட்டில் மிகவும் விவா தம் செய்யப்படுகின்ற ஒரு குடும் பமே ஊதாரி மைந்தனுடைய (லூக் 15:1132) தந்தையும், இரண் டும் புதல்வர்களும் அடங்கிய குடும்பம் இளையவன் எவ்வாறு
ஊதாரி மைந்தன் ஆனான். அறிஞர்கள் பல காரணங்கள் கூறுவர் இக் குடும்பத்தில் தந்தை செல்வச் செழிப்புடையவர். பணியாளர்கள் முதல் தரமான ஆடை, மோதிரம், கொழுத்த கன்றை அடித்துள்ளதிலிருந்து தெளிவாகும். செல்வச்செழிப்பார்ந்தக் குடும்பத்தில் சில மக்கள் வீண்செ லவு செய்கிறவர்களும் ஊதாரிகளும் ஒன்றுக்கும் உதவாதவர்களாக மாறு வது நாம் காண்பதுண்டல்லவா? அவர்கள் பணத்தின் மதிப்போ? அது உண்டாக்குவதற்கான துன்பமோ அறியார். அவ்வாறாகும் போது.செல் வமும், வீண் செலவுகளும் இந்த மகன் ஊதாரியாகக் காரணமாகலாம்.
ஊதாரி மைந்தனின் உவமைத் தொடங்குவது இவ்வாறாகும் அவர் கூறினார் ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள்.ஒரு குடும்பம் என்ற நிலையில் இல்லாத ஒருவர் உளர்.தந்தையும் இரண்டு மக்களும் உள்ள இக்குடும்பத்தில் இல்லாதவர் யாரென்பது கண்கூடு. அதுத் தாய் ஆவர். இதன் அடிப்படையில் சில விவிலிய அறிஞர்களின் விளக்கம் இவ்வாறு செல்கிறது. இரண்டு மக்க ளின் ஒருவன் ஊதாரியாகக் கார ணம் தாய் இல்லாததே. அதாவது ஊதாரி மைந்தர்கள் உண்டாகாமல் இருக்க தாய் இன்றியமையாதவர், தாய் தடையில்லாத அன்பினுடை யவும், அங்கீகாரத்தினுடையவும் பொறுமையுடையவும் அடையாள மாவர். எந்த குற்றவும் மன்னிக் கின்ற நீதிமன்றமாகும் தாய் உள் ளம் என்றால் மிகையாகாது.
தாயின் அருகிருப்பும், அன்பும், ஒரு குழந்தையைசமூக அறிவுடையவனும் மனிதத் தன்மை வாய்ந்த மதிப்பீடுகள் உட்க்கொள்ளக்கூடியவனும் ஆக் குவதாக உளவியலார் விளக்கிக் கூறியுள்ளனர். குழந்தையின் மனது ஒரு நீர்த்தேக்கம் போன்ற தாகும். நீர்த்தேக்கத்தில் நீர் ஒழுகி வந்து நிறைந்தால் மட்டுமே. பின் னால் அது விவசாயத்திற்கும் மற் றும் மற்றும் பயன்பாடுகளுக்கும் எடுக்க இயலும். அது போன்று ஒரு குழந்தையின் மனது அள வற்ற அன்பின் நீரினால் நிறைந் தால் மட்டுமே. பிற்காலத்தில் மற்ற வர்களை நேசிப்பதற்கான அன்பும் ஆர்வமும் அந்த குழந்தைக்கும் ஏற்படும்.
தாயின் அருகிருப்போ அன்போ கிடைக்காத குழந்தை பிற்காலத்தில் மற்றவர்களுக்கு அளிப்பது, புறக்கணிப்போ, அவம திப்போ, கொடுமையோ ஆகலாம் ஒரு குழந்தையின் மனதில் மற்ற வர்களிடம் அடிப்படை நம்பிக்கை யும், அன்பும், தளிர்ப்பது முதல் ஒன்றும். இரண்டும் வயதுகளில் உள்ள அநுபவங்களை அடிப்ப டையாகக் கொண்டாகும். எறிக்சன் என்ற அறிஞர் கூறுகி றார். “தாயின் அருகிருப்பும் பசிக் கும் போது ஆறுதலும், அன்பும்
அரவணைப்பும் மிகுதியாகக் கிடைக்கின்ற குழந்தையின் மனதில் வெளி யுலகத்திடமும். நல்ல மனநிலை வடிவமையும்”
குழந்தைகளிடம் மற்றவர்கள் கொள்ளுகின்ற அன்பு, அருகி ருப்பு, செயல்பாடுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டே, அந்தக் குழந்தையின் மனதில் தன்னைக் குறித்தும் ஏனையோர்களைக் குறித் துமுள்ள மனநிலைகள் ஏற்படுவது. ஏனையோர் என்று கூறும் போது குழந்தையைப் பொறுத்த வரையில் அவர்களின் பிரதிநிதி தாயே ஆவாள். தாய் தனது அருகிருப்பினாலும், அன்பினாலும் குழந்தைக்கு ஏற்றவாறு செயல்பட்டால் அவரும் மற்றவர்களும் நல்லவர்கள் என் றொரு அடிப்படைப் பார்வை குழந்தையின் மனதில் வடிவமையும். ஆ னால் சில இளைஞர்கள் தனது பெற்றோர்களிடமும் சமூகத்திலும் அள வுகடந்த எதிர்ப்புக் காட்டுவதும் அன்பு, நீதி இரக்கம் முதலான மனித மதிப்பீடுகளை புறக்கணித்து சொந்த நலனுக்காக தவறானச் செயல்க ளில் ஈடுபடுவதும் நாம் காண்கிறோம். விவிலியகாலத்தைப் போன்று இன்றும் ஊதாரி மைந்தர்கள் இருக்கிறார்கள் என்பது பொருள். தாய்ப் பால் வழியாக தாயின் அன்பும் மணவும்,சுவையும் நுகரும் ஒருவர் தாய் அளிக்கும் மதிப்பீடுகளை உட்கொள்ளுவர். அவ்வாறு கூர்மை யான தாய் குழந்தை உறவு உட்கொண்டவர், பின் தாயின் அருகிருப்பு இல்லாத போதும் தாய் அளித்த மூலியங்களை புறக்கணிப்பதில்லை. மாறி உலர்ந்த அன்பும், அருகிருப்புமே ஒருவருக்குக் கிடைத்திருந் தால், அவர் சமூக மதிப்பீடுகளைக் காற்றில் பறக்கவிட்டு, ஊதாரியும், விருப்பத்திற்குச் செயல்படுபவரும்,சமூக விரோதியும் ஆவதற்குள்ள வாய்ப்புகள் அதிகமாகும்.
இறைவனுக்குத் தன்னிடம் உள்ள அன்பும், கருத்தும், ஒரு நபர் துய்த்தறிவது பெரும்பாலும் பிறர் வழியாகவே ஆகும். ஒரு அயல்நாட்டுப் பழமொழி கேட்டிருக்கிறேன். இறைவனுக்கு எல்லா இடங் களிலும் நேரில் சென்றடைய இயலாமையல் தாய்மார்களை படைத் துள்ளார். தாயின் அன்பு, இறையன்பை போன்று திவ்வியமும், தூய்மை யும் பேரார்வமும் உடையதென்றும். அது தாயன்பு வழியாக ஒரு குழந்தை துய்க்கிறது. அது கடவுளின் அன்பும் பரிவும் ஆகும். ஒரு குழந்தைக்கு தாய் தந்தை உறவினர்கள் ஆகியோரின் அன்பு இன்றியமையாததா கும். ஆனால் தாயன்பின் மணமும், சுவையும் வேறுப்பட்டதாகும். ஆயி னும்,தாயின் முகவும், மனமும் குழந்தையின் இதயத்தில் பதிவதற்க்கு முன் குடும்பம் போற்றுவதற்கான வேலைக்காக அயல்நாட்டில் பறக் கும் மாம்மியர்களின் எண்ணிக்கைக் கூடி வருகிறது. வாழ்க்கைக்குப் பணம் அம்மாக்களின் இன்றியமையாததே. ஆயினும் அதன் பெயரில் ஒரு குழந்தைக்கு. தாயின் அருகிருப்பும். தாய்ப்பாலும் மறுக்கப்படுவது கொடுமையிலும் கொடுமையாகும்.
ஊதாரி மைந்தர்கள் பிறக்காமல் இருப்பதற்கு தாய்மார்கள் உயிர் வாழ்ந்தால் மட்டும் போதாது. அவர்களது உடலின் அருகிருப்பும் அன் பும் அனுபவிப்பதற்கான வாய்ப்பும் இன்றியமையாததாகும்.தாயின் அன் பும் மணவும்,சுவையும் துய்த்தவனுக்கு எவ்வாறுஊதாரி மைந்தனாக இருக்க இயலும்
