உறுதியாக நில்லுங்கள் -முடி சூடுங்கள்

புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் திருமுகத்தில் கூறுகிறார் “அவரோடு நிலைத்திருந் தால் ஆட்சி செய்வோம்” (2:12)
இயேசு ஒரு பெண்ணின் நம்பிக்கையை புகழுகின்ற ஒரு நிகழ்ச்சி நாம் நற்செய்தியில் காண்கிறோம். அவர் ஒரு வேற்றினப் பெண்ணாவார். அவளது மகள் அல கையால் துன்புறுத்தப் படுகிறார். தன் மகள் நலம் பெற வேண்டும் என்ற மன்றாட்டுடனே அவள் வந்துள்ளாள், அவளது இதயத்தைத் தொட்ட மன்றாட்டிற்கு பதிலே கூறவில்லை என்று முதலில் தோன்றும். அவ ளது உதவியற்ற நிலையில் சீடர்களுக்கும் வருத்தம் தோன்றியது. சீடர் களும் அவளுக்காகப் பரிந்துரைக்கின்றனர். “அவளை அனுப்பி விடும் அவள் நம் பின்னால் வந்து அழுகிறாள்” ( மத் 15:23) என்று இயேசுவி டம் கூறினர்

இயேசுவின் பதில் ஊக்குவிப்பதாக அமையவில்லை “இஸ்ர யேல் குலத்தாருள் காணாமல் போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டி களுக்குப் போடுவது முறை முறையல்ல” (மத் 15:24-27) இயேசுவின் இந்த வாக்குகளும் அவளை நிராசைப்படுத்தவில்லை. இயேசுவிடம் இருந்து இரக்கம் கிடைப்பதற்கான ஒரு நீதியும் தனக்கில்லை என்று அவள் அறிவாள். காரணம் தான் ஒரு வேற்றினப் பெண்ணாவேன். ஆயினும்அவள் முயற்சியிலிருந்து சிறிதும் பின் வாங்கவில்லை. காரணம் அவள் இயேசுவிலிருந்து மீட் பைப் பெறலாம் என நம்பிவிட் டாள். அவள் இயேசுவிடம் பேரார் வத்துடன் முறையிடுகிறாள். ஆம் ஐயா ஆனாலும் தங்கள் உரிமை யாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” (15:27). இந்த நேரத் தையே இயேசு எதிர்பார்த்திருந் தார். ஆகையால் அவர் கூறுகி றார். அம்மா உனது நம்பிக்கைப் பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் (மத்15:28)
நம்பிக்கையின் உண்மை யானப் பொருளை எடுத்துக் காட் டுவதே இந்த நிகழ்வு. எனது வாழ்க்கையும் எனது விருப்பங்க ளும் இறைக் கரங்களில் ஒப்ப டைக்க நம்பிக்கை என்னிடம் தேவைப்படுகிறது. இறைவனுக்கு ஒரு கால அட்டவணை அளிக் கவோ காலத்கெடு அளிக்கவோ மனிதனுக்கு உரிமை கிடையாது. எனது எதிர்காலத்தை நான் இறை வனிடம் அர்ப்பிக்கின்றேன். நான் இறைவனது நேரத்திற்காக மன் றாட்டுடன் காத்திருக்கிறேன். இறைவனின் கேள்வி கேட்பதற் கான யுக்திகள் மனதில் தோன்றி னாலும் நான் அதை மறுப்பேன். இறை அன்பிற்கான எனது அடி மைநிலையை உறுதியாக வெளிப் படுத்துவேன்.
மனிதனின் திட்டங்களை விடவும் மிகவும் உயர்ந்ததே எல்லா வகையிலும் இறைவனது திட்டங்கள். என்று நம்பிப் பகுத்த றிய வேண்டும். இறைவன் புரிந்து
கொள்வது இல்லை என்றோ? கவனிப்பதில்லை என்றோ சூழ்நிலையின் நிலைப்பார்ப்பதில்லை என்றோ! நமக்கு தோன்றலாம். அத்தகைய நேரங் களிலும் இறைவன் செயல்படுவதற்காக எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வேண்டும். இறைத்தன்மை இல்லாத கழிவாய்கள் அனைத்தையும் மறுக்க வேண்டும். காரணம் இறைவன் இடைவெளியில்லாத நன்மை என்று நாமறிவோம்.
இறைவனிடமுள்ள அன்பு அர்ப்பணமே நம்பிக்கை. அது இறை வனுக்காகக் காத்திருந்து சலிப்பதில்லை. இறைவன் நம்மை ஒருபோ தும் புறக்கணிக்க மாட்டார். நான் அவருக்கு சிறந்த நிதியாவேன் என்று அவனுக்கு இதயத்தின் அடித்தட்டில் நல்ல அறிவுள்ளது.
“பாறை மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான்” (மத் 7:24) பொறியியல் பட்டம் பெற்ற ஒரு இளவலிடம் நடந்த உரையா டல் நினைவில் உள்ளது. புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலையில் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் தனக் குக் குருத்துவத்திற்கு அழைப்புள்ளதாக அவனுக்குத் தோன்றியது. இச் செய்தியை அவன் பெற்றோர்களுமாக, பங்கு வைத்தான். அவர்கள் மனக் குழப்பத்தில் ஆழ்ந்தனர். காரணம் அவர்களுடைய ஒரே மகனாவான் அவன். அவர்கள் கனவுகள் அனைத்தும் அவனைச் சூழ்ந்திருந்தது. அவன் பெரிய செல்வன் ஆவான் என்றும், தங்கள் முதுமையில் துணை யாக இருப்பான் என்றும் அவர்கள் எண்ணினர், அவர்கள் அந்த எண் ணத்தை மாற்ற வேண்டினர். அவனுக்கு வேலையில் ஏற்படும் முன்னேற் றத்தை அவர்கள் சுட்டிக்காட்டினர். அந்த வேலையைப் புறக்கணித்து துறவியாவது மடமை என்றும் பின்னால் துன்புற வேண்டிவருமென்றும் அவர்கள் அறிவுரை கூறினர். துறவற வாழ்க்கையில் ஏற்படும் துன்ப துயரங்களை அவர்கள் ஞாபகமூட்டினர். துறவிகளைப் பற்றியக் கதை களும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்த வாதங்கள் ஒன்றும் அவனில் தடை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இயேசுவிற்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணிப்பதற்கான தாகம் அவனில் ஏற்பட்டது. திட்டங்கள் வகுத்து பணம் ஈட்ட நான் வணி கன் அல்லன். ஊழியத்திற்காக இயேசு என்னை அழைத்துள்ளார். என்ற உறுதியான அறிவினால், அழைத்தவரிடம் நம்பிக்கைக் காட்ட வேண் டும் என்ற ஒரே எண்ணத்தில் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறினான்.
இயேசுவே! உமது உறுதியான அன்பிலும், இரக்கத்திலும், ஆற் றலிலும், கருதலிலும் உறுதிபெற எனக்கு ஆசி அளித்தருளும். உமது ஆற்றலால் எனது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளச் செய்தருளும், ஆண்டவர் அருள்செய்த அனைத்தையும் நம்பி வாழ்க்கையில் ஆசி பெற்ற தூய தாயே, உமது நம்பிக்கை அனுபவம் என்னில் நிறைவு பெற மன்றாட வேண்டுகிறேன்