இயேசுவின் மீட்பும் திட்டமும் மரியா ஜெபமாலையும்

திருவிவிலியத்தில் மீட்பு திட்டத்தின் அரங்கேற்றம். இறை மகனின் மனித அவதாரம்-பெத்லகேமில் தீவனத்தொட்டியிலல்ல. ஆனால், மரியாவின் மன சம்மதத்தின் வார்த்தையிலேதான், நான் ஆண்டவரின் அடிமை என்று மரியா சொன்னபோது, தூய ஆவியானவர் அவர்மீது எழுந்தருளி வந்தார். இறைமகன் மரியாவின் வயிற்றில் கருவுற்றார்.
இயேசுகிறித்து வழியாக மீட்புத்திட்டத்தில் ஆதியும் அந்தமும் பங்கு பெற்றுள்ள ஒரே ஆள் தூய மரியாதான்.
இயேசுவுடன் மிக அதிக தொடர்புடையவர் அருள்நிறைந்த அம்மாதான். மாசற்றவரான இயேசுவின் தாய். இயேசுவின் மேன் மையால்தான் அமல உற்பவியாக ஆண்டவர் படைத்தார்.
என் நெஞ்சம் பூரிப்படைகின்ற ஊழியர் (எசா 42:1, இயேசு வைக் குறித்துள்ள இறைவாக்கு. மரியா இதனை தனதுவாழ்வுத் திட்டமாக மாற்றினார். இதோ, நான் ஆண்டவரின் அடிமை 1:38)
இயேசுவின் வாழ்வை தியானிப்பதற்கும் செபிப்பதற்கும் உத வுகின்ற முறையிலேதான் 20 இரகசியங்களுள்ள முழுமையான செபமாலை உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. இயேசுவின் வாழ்வை தியானிக்கின்றவர். இயேசுவுடன் ஒன்றிணைகின்றனர். இயேசு வின் வாழ்க்கை பேறுபலன்களால், தூய ஆவியாரின் அருள்கொ டைகள் நம்முள் இறங்கிவரும். அப்போது தீமையின் வல்லமை அழிக்கப்படும்.
19 வருடங்களுக்குமுன், இந்த எழுத்தாளர் ஐரோப்பாவில், போசினியாவில் மெஜீகோரியில் மூன்று நாள் இருந்தபோது கிடைத்த இறைவாக்கு அறிவித்தல்..செபமாலை என்பதென்ன? எதற்காகத்தான் சொல்கிறார்? மரியாவுடன் இணைந்து செபிக் கிறோம். இயேசுவின் வாழ்வு தியானித்து செபிக்கிறோம். இயேசு வாழ்வின் தன்மையால், பலனால் செபிக்கின்ற நமக்கும் யாருக் காக செபிக்கிறோமோ அவருக்கும் தூய ஆவியாரின் திருப்பொ ழிவு கொடுக்கப்படுகிறது அதே நேரத்தில் பாவமும், தீய பழக் கங்களும், இருள் பலத்தின் செயல்களும் அழிந்து போகின்றன. ஊழியம் செய்யும் பலம் கொடுக்கப்படுகிறது.
ஆம். செபமாலை பக்தி வழி, அனேகருக்குத் தேவையான பரிந்துரை செப வல்லமை, ஊழியம் செய்யும் வல்லமை அதிக ரிக்கும்.
இயேசுவின் வாழ்வு தியானித்துக்கொண்டுள்ள செபமாலை யில் அனேகருடைய பாவக்கட்டுகள் நீக்கப்படுகின்ற அனுபவம். அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார் என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது மத்8:17).
(திருப்பாடல் 116:16) இயேசு பிதாவிடம் சொல்வதைக்கவனிக்கவும். அ) ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்
ஆ) ஆண்டவரே! நான் உம் பணியாள், உம் அடியாளின் மகன், (அடியாள் ஆண்டவரின் தூய அன்னையாவார்),
தொடர்ந்துள்ள அனுபவம் நம் ஒவ்வொருவருக்கும் தேவை தான் விசுவாசிகள் ஒவ்வொருவரும் சொல்லவேண்டும்.
இ) ஆண்டவரே! என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர் அன் பர்களே, செபமாலை மன்றாட்டில் ஆண்டவர் அனேகருடைய கட்டுகளை அவிழ்க்கின்ற ஆன்ம அருள் பொழியப்படுகிறது