ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்த அன்னை

ஏரோது அரசன் காலத்தில் பெத் லகேமில் இயேசு பிறந்தார். அப் போது கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் எருசலேமுக்கு வந்து யூதர்களின் பிறந்திரிக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்துள்ளோம் என்று ஏரோது அரசனிடம் கூறி அரசராக
6
னார்கள். இதைக் கேட்ட ஏரோது அரசன் கலங்கினார். உடனே அவன் தலைமை குருக்களையும் மக்களிடையே இருந்த மறைநூல் வல்லு னர்களை அழைத்து இயேசு எங்கே பிறக்கபோகிறார் என்று கேட்டார். அவர்களோ இயேசு பெத்லகேமில் பிறப்பார் என மறைநூலில் கூறி இருக்கிறது என்றனர். அப்போது ஏரோது ஞானிகளை அழைத்து இயேசு பிறந்த விவரத்தை தெரிந்து அதை உறுதி செய்தான். பிறகு ஞானிகளிடம் குழந்தயை பார்த்துவிட்டு அதன் விவரத்தை என்னிடம் தெரிவியுங்கள் என்றான்.
ஏரோது இயேசுவை காணவேண்டும் அவரை தாமும் ஆராதிக்க வேண்டும் என்பதல்ல அவருடைய எண்ணம். தனக்கு எதிராக ஒருவர் வரக்கூடாது என்கிற எண்ணம் ஏரோது அரசனிடம் இருந்தது. அத னால்தான் ஆண்டவர் ஞானிகளிடம் ஏரோதை காணாமல் போகுமாறு கூறினார். ஞானிகளை காணாத ஏரோது ஆண்குழந்தைகள் அனைத் தையும் கொல்ல வேண்டுமென்ன கட்டளை பிறப்பிக்கின்றார். ஆதலால்

தான் நம் ஆண்டவர் சூசையப்ப ருக்கு கனவில் தோன்றி குழந்தை யையும் தாயையும் அழைத்து கொண்டு எகிப்திர்க்கு போகவேண் டுமென்று கட்டளையிட்டார். ஆண்டவருடைய வாக்கை ஏற்று நம் அன்னை குழந்தையை எடுத் துக்கொண்டு எகிப்திர்க்கு பயண மானார். எகிப்து அன்னிய நாடு. அங்கே சொந்த பந்தமோ, இன மக் களோ யாரும் கிடையாது. அங் கே, அவர்களுக்கு, எந்த உதவியும் கிடைக்காது. இதையெல்லாம். தெரிந்த நம் அன்னை ஆண்டவ ருடைய வாக்கை மட்டும் விசுவ சித்து, எகிப்திர்க்கு போனார். நம் அன்னை சிந்தித்திருக்கலாம். என் குழந்தை கடவுள் அதை கொல் வதற்கு யாரால் இயலும். எனவே, எகிப்திர்க்கு போகமுடியாது என்று கூறியிருக்கலாம். ஆனால், நம் அன்னை அப்படி செய்யவில்லை. ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப் படிந்தார். தொடக்கநூல் 12-ல் ஆபிரகாமை ஆண்டவர் அழைக் கும்போது ஆபிரகாம் ஆரானில் வசித்து வருகிறார். அப்போது அவ ருக்கு வயது 75. அவர் மனைவி சாராவுக்கு வயது 65. ஆண்டவர் சொன்னார், நான் உனக்கு காட் டும் நாட்டிற்கு போகவேண்டு மென்று கூறியபோது, தனது வய தேயோ தனது சொந்த சுகங்க ளையோ, எதையும் பார்க்காமல் ஆண்டவர் காட்டிய பாதையில் ஆபிரகாம் நடந்தார். அதனால் தான் ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை என அழைக்கப்பட்டார். தனக்கு முன்னால் இருந்த கஷ் டங்களையோ, பாடுகளையோ, அவர் சிந்திக்கவில்லை. ஆண்டவருடைய வார்த்தை மட்டும் விசுவசித்தார். மோசையே ஆண்டவர் அழைத்தார். தம் மாமனாரின் ஆடுகளை மேய்த்த்துக்கொண்டிருந்த போது எரிகின்ற நெருப்புக்கு நடுவே ஆண்டவர் காட்சி அளித்தார்

விடுதலை பயணம் 3:7 -ல் ஆண்டவர் கூறினார், எகிப்தின் என் மக் கள் படும் துன்பத்தை கண்களால் கண்டேன். அடிமை வேலை வாங் கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலை கேட்டேன். ஆம் அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே, எகிப்திய ரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும் அந்நாட்டிலிருந்து தேனும் பாலும் பொழியும் நாட்டிற்கு – அதாவது கானானிய, ஏரோமி யர், பெரீசியர், இந்தியர், இவ்வியர், எபேசியர் வாழும் நாட்டிற்கு அவர் களை நடத்தி செல்லவும் இறங்கிவந்துள்ளேன். இப்போது இதோ இஸ் ரயேல் மக்களின் அழுக்குரல் என்னை எட்டியுள்ளது மேலும் எகிப்தி யர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமைகளையும் கண்டுள்ளேன். என வே. இப்போதே, போ, இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப் திலிருந்து நடத்தி செல்வதற்காக உன்னை பரவோனிடம் அனுப்புகி றேன். (விடுதலை பயணம் 3:7-10).

மோசை எகிப்தில் பிறந்தவர். எகிப்தில் வாழ்ந்த ஒரு லேவி தம்பதிக ளுக்கு மகனாக பிறந்து ஆண்டவருடைய பாதுகாப்பால் பரவோனு டைய அரண்மனையில் மகளின் மகனாக வளர்க்கப்பட்டவர். பெரிய வனானபோது தம் மக்களை காணசென்றபோது தன் மக்கள் படும் துன் பத்தை பார்த்து ஒரு எகிப்தியனை அடித்து கொன்று மணலில் புதைத்து விட்டார். இதை அறிந்த பரவோன் மோசையைகொல்ல தேடினான். பரவோனுக்கு பயந்து மீதியா நாட்டிற்கு சென்று, மிதியா நாட்டுக்குரு இத்திரோவின் மகளை மணந்து மாமனாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஆண்டவர் தோன்றி எகிப்திற்கு போ என்று சொன் னபோது மோசை கீழ்ப்படிந்தார். தமக்கு பரவோனால் ஆபத்து ஏற்ப டும் என்கிற பயம் இருந்தாலும் தம் உயிரை பார்க்காமல் சென்றார். பர வோன் அரசர் இஸ்ரயேல் மக்களை அனுப்ப மறுத்தபோது ஆண்ட வர் மோசை வழியாக பத்து அற்புதங்கள் செய்ததாக விடுதலை பய ணம் 7 முதல் 15 வரை அதிகாரங்களில் நாம் காண்கிறோம். மோசை கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்தபோது கடவுள் மோசையே உயர்த் தினார், மிகப் பெரிய இனத்தலைவராக்கிரார். மோசை வழியாக அர்ப் புதங்களை செய்தார். யார் ஒருவர் கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படி கின்றாரோ அவரை கடவுள் உயர்த்துவார். நம் அன்னை கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தபோது கடவுளின் தாயானார். நம்முடைய வாழ் விலும் உலகபடியாக எண்ணங்களுக்கும் செயலுகளுக்கும் இடம் கொடுக்காமல், சுய லாப சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல், தாழ் மையான உள்ளத்துடனும் எண்ணத்துடனும் நாம் கடவுளின் வார்த் தைக்கு இடம் கொடுத்து அவரது பாதையில் நடந்தால் நாமும் நம் அன்னையைப் போல உயர்த்தப்படுவோம்.