
ஒருமுறை ஒரு சகோதரி என்னிடம் பேச வந்தார். அவர் முழுவதும் கணவ னது குற்றங் குறைகளையே கூறினார். கணவனுக்கு இறை நம்பிக்கை கிடை யாது, கோவிலுக்குச் செல்வதில்லை. பல தவறுகள் செய்துள்ளார் என தங் குதடையின்றி கூறிக் கொண்டிருந் தார். நான் இடைமறித்து, ‘சகோதரி, நீங் கள் இருவரும் இறந்தால் மோட்சத்திற் குச் செல்வீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் கணவர் நரகத்திற்கு செல்வது உறுதி. நான் மோட்சம் வரை சென்று, வாசலையாவது அடைவேன் எனக் கூறினார். அவர் அவ்வாறு கூறக் காரணம் உள்ளது. கணவர் கோவிலுக்குச் செல்வதில்லை. நம்பிக் கையும் கிடையாது.
விவிலியத்தில் இறைவன் எடுத்துக் காட்டுகின்ற ஒரு செய்தி உள் ளது. பரிசேயனும், வரிதண்டுபவனும் கோவிலுக்குச் செல்கின்றனர். பரிசேயன் தேவாலயத்தின் உள்ளே சென்று மன்றாடினான். பரிசேயன் தன்னை வரிதண் டுபவனுடன் ஒப்பிட்டு மன்றாடினான். நான் அவனை விட உயர்ந்தவன். நான் நோன்பிருக்கிறேன், காணிக்கைச் செலுத்துகிறேன், என் பின்னால் நிற்கின்ற வரிதண்டுபவனைப் போன்றவன் அல்லன் என்றெல்லாம் பரிசேயன் கூறினான். வரிதண்டுபவனோ கோவிலுக்கு வெளியில் நிற்கிறான். அவன் பார்த்தபோது அங்கு யாருமே கிடையாது. அவன் பின்னே வேறு யாரும் கிடையாது. நான் மிகவும் பின்னால் நிற்பவன், என்னை விட பாவி வேறு யாரும் இல்லை. உமது முன் நிற்கும் தகுதி எனக்குக் கிடையாது என்று நெஞ்சிலடித்து அழுது பரிசே யன் இறைவனிடம் மன்றாடுகிறான். அவனுக்கு அருளாசீர் வழங்கியதாக இயேசு கூறுகிறார்
வரிதண்டுபவன் அருள் பெற்றது எவ்வாறு? அவனது ஒன்றுமில் லாமையை அவன் ஏற்றுக்கொள்ள தயாரானபோது இறையருளை நிறைவாக பெற்றான். அவன் எளிமையின் முன்பு நின்றான். உண்டாகட்டும் என்று ஆண் டவர் கூறியபோது விண்ணும், மண்ணும், விண்மீன்களும், மரம் கொடி செடிக ளும் உண்டாயின, இறைகரங்களிலிருந்தே நாம் அனைத்தையும் பெற்றுக் கொள்கிறோம். நமது கையை விட்டுச் செல்வது இறைவனது கைக்கே செல் கிறது ஆகையால் இழந்தது ஒன்றுமில்லை. இறைவனின் முன் ஒன்றும் இல் லாதவனாக நிற்கும்போது அவர் அனைத்தையும் திரும்பவும் தந்து ஆசி வழங் குவார்.
