அன்பு செலுத்தத் தெரியுமா?

பேரார்வத்தால் நோன்பு நோற்றல் வழியாக வலிமையான இறையனுபவத்திற்காக தாகிக்கும் நாம். நம்மிடம் கேட்க வேண்டிய ஒருக் கேள்வி உள்ளது. எனக்கு அன்பு செலுத்தத் தெரியுமா? இறைவனிடம்? சகோதரனிடம்? அடுத்த கேள்வி. எனக்கு அன்பைத் துய்க்க இயலுகிறதா? அன்பு காட்டத் தெரியுமா? அறுப தாண்டைய நீண்ட நெடிய குடும்ப வாழ்க்கைக்குப்பின் மனைவி மறைந்த போது ஒரு முதியவர் அழுது புரண்டுக் கூறுவதைக் கேட் டிருக்கிறேன். அவள் இவ்வளவு அதிகமாக என்னை நேசித்ததாக வாழ்க்கையில் ஒரு போதும் நான் அறிந்து கொள்ள வில்லை. பல வேளைகளிலும், அன்பு செலுத் தவோ? அன்பைத் துய்க்கவோ, அன்பு காட்டவோ இயலாதவன் ஆவேன் என்ற உண்மை என் முன்னில் அச்சமளிக்கிறது. ஆகையால் வாழ்க்கை யைப் புதுப்பிப்பதற்காக நோன்பி ருக்கும் நாம் நம்மிடமே வினவ வேண்டியக் கேள்வி ஒன்று உள்ளது. நான் அன்பு செலுத்த அறிவேனா? என்ற புனித யோவானின் கூற்றா கும். ‘கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரி டம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப் பார். அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். (1யோவா 4:12) கட்டளை களில் மிகச் சிறந்த கட்டளை எதுவென்று கேட்டத் திருச்சட்ட அறிஞ ரிடம் இயேசு கூறினார். “உன் முழு இதயத்தோடும். முழு உள்ளத்தோ டும் முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. உன் மீது அன்பு கூர் வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை” (மத் 22:37,38) நாம் அனைவரும் அன்பு கிடைக்க ஆசைப்படுபவர்கள் ஆவோம். ஆனால் அன்பு செலுத்த அது போன்று ஆசைப்படுகிறோமா ஆன்ம சோதனை நடத்த வேண்டும். அன்பு செலுத்தவும் அன்பை வெளிக்காட்டவும் எனக்கு முடிகிறதா? ஒரே உடலாக்கப்பட்டக் கணவ னின் அன்பின்மையால் துன்புறுகின்ற மனைவியர் பலராவர், மனைவி யின் அன்பிற்காக தாகிப்பவர்களும் உள்ளனர், மக்களின் அன்பிற்காக ஏங்குகின்ற பெற்றோர்கள் ஏராளம். பெற்றோர்கள் அன்பு செலுத்த வில்லை என்று வருந்துகின்ற மக்களும் குறைவில்லை. நம்மைச் சூழ்ந்து அன்பு கிடைக்காதவர்களின் பெருங்கூட்டம் உள்ளது. ஆகையால் தான் பலருடையவும் அன்பு மந்தமாகியுள்ளது. தனக்குக் கிடைக்க இயலா தது தான் எவ்வாறு கொடுக்க இயலும் என்பதே கேள்வி. மாறி மாறிப் பேசாமல் முகம் பார்த்து ஒரு புன்முறுவல் செய்யாதவர்களின் வாழ்க்கை நரகத்திற்கு இணையானதே.